திமுக மூத்த நிர்வாகியும், கடலூர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவருமான தங்கராசு காலமானார்.
கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக அவை தலைவர் மற்றும் முன்னாள் நகர மன்ற தலைவர் மற்றும் முன்னாள் நகர செயலாளர் து.தங்கராசு நேற்று காலை 6 மணியளவில் உயிரிழந்தார். இவருடைய இறுதி ஊர்வலம் இன்று காலை 10 மணியளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அண்ணா நகர் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. தங்கராசு மறைவு கட்சியினர் மத்தியில பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.
தங்கராசுவை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கராசுவை கடந்த 1-ம் தேதி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்த்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தங்கராசு மறைவுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.