பாலாஜியின் கைது நடவடிக்கையை தொடர்ந்து சட்டவல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். செந்தில்பாலாஜி முக்கிய துறைகளின் அமைச்சராக இருப்பதால், மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.
தற்பொழுது நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.