fbpx

தமிழகமே… இனி‌ ரேஷன் கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்…! அரசு வெளியிட்ட இன்பச் செய்தி…!

தமிழகத்தில் ரேஷன் விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையாக விளங்கும் ரேசன் கடைகளின் நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமிபத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் ஆர்வமுள்ள மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கு எரிபொருள் நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் கூறி இருந்தார். ரேஷன் கடைகள் மூலம் நிதி சேவைகள் வழங்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக நிதி சேவைத்துறை அதிகாரி கூறி இருந்தார்‌.

மகாராஷ்ட்ரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ரேஷன் விலைக்கடைகள் மூலம் சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பொது விநியோக முறை கட்டுப்பாட்டு ஆணை 2015ன் கீழ், ரேஷன் கடைகளுக்கு உரிமங்கள் வழங்கப்படுகின்றன. உணவுப் பொருட்கள் தவிர்த்த இதர பொருட்களை விற்க இந்தக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

#Rain: 7-ம் தேதி வரை கனமழை...! இன்று இந்த 12 மாவட்டத்தில் உள்ள மக்கள் கவனமாக இருங்க...!

Sun Sep 4 , 2022
தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; வட தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, […]

You May Like