fbpx

கால்வாயில் திடீர் அடைப்பு..!! சுத்தம் செய்த மக்களை தூக்கிவாரிப்போட்ட சம்பவம்..!! நிர்வாண நிலையில் கர்ப்பிணி சடலம்..!!

திருமங்கலம் பகுதியில் கால்கள் கட்டப்பட்டு, இறந்த நிலையில் கர்ப்பிணி பெண் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி மனைவி தேவி (32 ) மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது தேவி கர்ப்பமாக இருந்த நிலையில், திருமங்கலம் பகுதியில் உள்ள பாலாஜி என்பவரது வீட்டில் பூ எம்பராடிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தேவி சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், பதறிப்போன கணவன் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் (ஜூன் 8) திருமங்கலம் பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியது. இந்த அடைப்பை அப்பகுதி மக்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது, கால்வாயில் பெண் இறந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், கால்கள் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக இறந்த கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் புகார் கொடுத்த முருகனின் மனைவி என்பதும், கொலை செய்யப்பட்டு கால்வாயில் யாரோ வீசிச்சென்றதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டு சம்பவ அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : மனைவி தவறான உறவு வைத்திருந்தால் கணவர் விவாகரத்து பெறலாம்!… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

English Summary

The incident in Thirumangalam area where a pregnant woman was recovered with her legs tied and dead has caused a shock.

Chella

Next Post

இஸ்ரேலின் கொடூரம்!… 4 பேருக்காக 210 பேரை கொன்ற அரக்க குணம்!

Sun Jun 9 , 2024
Hamas said 210 people were killed in Israeli airstrikes on the central Gaza Strip to rescue four hostages.

You May Like