திருச்சி மாவட்டம் பகுதியில் உள்ள பாளையம் கீழூர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கனகராஜ். அவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.
மேலும் சரண்யாவுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த உறவினர்கள் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா இறந்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.