பொதுவாக கணவன் மனைவி போல் அவசியம் இருக்க வேண்டியது நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாவிட்டால், ஒட்டுமொத்த வாழ்வும், சூனியம் ஆகிவிடும். அதனை பலரும் புரிந்து கொள்வதில்லை. அதன் காரணமாக தான், பல குடும்பங்கள் நிற்கதியாக நிற்கின்றனர்.
அந்த வகையில், கேரள மாநிலத்தில் வசித்து வரும் ரஹீம் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அவருடைய மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரை அடித்துள்ளார். இது பற்றி மனைவி காவல் நிலத்தில் புகார் அளித்ததன் பேரில், ரஹீமை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவருடைய மனைவி நாதிரா ஒரு இ சேவை மையத்தில் கேரள மாநிலம் கொல்லம் அருகே பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், ரஹீமுக்கும், நாதீராவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ரஹீம் மற்றும் நாதீரா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படியான சூழ்நிலையில் தான், மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட ரஹீம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தண்டனை காலம் முடிந்து, சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் அவர் தன்னுடைய மனைவியை கொடூரமான முறையில் எரித்து கொலை செய்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் நாதீரா பணியாற்றி வந்த அந்த இ சேவை மையத்திற்கு சென்ற ரஹீம், அவருடன் சண்டை இட்டுள்ளார். பின்பு திடீரென்று கோபம் அடைந்த அவர் தான் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து, நாதீராவின் மீது ஊற்றி தீ வைத்தார். இதனால், அந்த இடத்திலேயே நாதீரா துடிதுடித்து, உடல் கருகி உயிரிழந்தார்.
இதன் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற ரஹீம் மனமுடைந்து, ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அதற்கு முன்பாகவே ஒருவேளை, நம்மை யாராவது காப்பாற்ற முயற்சி செய்தால் என்ன செய்வது? என்று யோசித்த ரஹீம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு, அதன் பிறகு தான் கிணற்றில் குதித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பார்வையிட்டு, இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.