முதல்வர் ஸ்டாலின் நேற்று நுரையீரல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடித்து நேற்றையதினம் வீடு திரும்பினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று ரூ.200 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஈட்டன் குழுமத்தின் துணை நிறுவனமான, ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை சோழிங்கநல்லூரில் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையம் அமைப்பதற்கு, முதலமைச்சர் நேற்று அடிக்கல் நாட்டினார்.
மேலும் சென்னையின் முக்கிய அடையாளமாகிய நேப்பியர் பாலத்தின் அருகில் தீவுத்திடலில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மையம் உள்ளடக்கிய பொது சதுக்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி மையம், நமது பாரம்பரியமிக்க கட்டடக்கலை அமைப்புடன், 40 கண்காட்சி அரங்குகள், பொது நிகழ்ச்சி கூடங்கள், உணவகங்கள், 8 மின் தூக்கி வசதிகள், 148 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 148 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதிகள் மற்றும் 200 நவீன கழிப்பிட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தொடர் அரசு அலுவல்கள் மற்றும் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு நுரையீரல் செயல்பாடு தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், CT ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைகளுக்கு பிறகு அவர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இது வழக்கமான பரிசோதனைதான் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.