fbpx

மீண்டும் மீண்டுமா.? கனமழை.! தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களை கனமழை மற்றும் புயல் தாக்கியது. இதில் பெரும் அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது வரை நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வருகின்ற ஜனவரி ஐந்தாம் தேதி வரையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் அரபிக் கடலின் வடமேற்கு பகுதியில் நகர்ந்து அரபிக் கடலின் தென்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் பகுதிகளான நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Next Post

திருச்சி: 27 வயது இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை.! பட்டதாரி வாலிபரின் உயிரை குடித்த காதல்.! பரபரப்பான தகவல்கள்.!

Sat Dec 30 , 2023
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள எஸ் புதூர் பகுதியை அடுத்த பூசாரி தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தமிழகன். இவரது மகன் திவாகர் வயது 27. முதுகலை பட்டதாரியான திவாகர் […]

You May Like