fbpx

ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களுக்கு துரோகம் செய்த திமுக அரசாங்கம்…! எச்.ராஜா விமர்சனம்…!

வேங்கை வயல் விவகாரத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களே தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று கூறுவது தமிழக முதல்வரின் நிர்வாகத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்‌.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியிருக்கிறார். தமிழக காவல்துறை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் இயங்கி வருகிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களே தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று கூறுவது தமிழக முதல்வரின் நிர்வாகத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

திருமாவளவன் அவர்களின் பாணியிலே இதை சொல்வதாக இருந்தால் தோழமை சுட்டுதல் என தமிழக முதல்வர் அவர்கள் எளிதில் இந்த விமர்சனத்தை கடந்து செல்லலாம். ஆனால் உண்மை என்னவெனில் தமிழக முதல்வரின் நிர்வாகத்தின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. வேங்கைவயல் விவகாரத்தில் ஆரம்பம் முதலே சிபிஐ விசாரணை தேவை என்பதை பாஜக வலியுறுத்தி வருகிறது. அப்போது அமைதியாக இருந்த திருமாவளவன் இப்போது சிபிஐ விசாரணை தேவை என கூறுவது காலம் கடந்த விஷயமாகவே இருக்கிறது.

வேங்கைவயல் கொடுந்துயர நிகழ்வு நடந்தேறி இரண்டு ஆண்டுகள் கழித்து திமுக அரசு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்திருப்பதும் அதில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மூவர் மீது குற்றம் சுமத்தி இருப்பதும் விசித்திரமாகவும், சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவும் இருக்கிறது. திமுக அரசு வேங்கைவயல் கிராம மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களுக்கும் மிகப்பெரிய துரோகம் இழைத்திருக்கிறது. சமூகநீதி குறித்து திமுக தலைவர்கள் மேடைகள் தோறும் பேசுவதெல்லாம் வாக்கு வங்கி அரசியலுக்கான அலங்காரச் சொற்கள் தானே தவிர வேறொன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.

English Summary

The DMK government has betrayed the entire Scheduled Caste community.

Vignesh

Next Post

ரியல் ஹீரோ..!! 13-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை..!! பதறியடுத்து ஓடிச்சென்று காப்பாற்றிய நபர்..!! வைரலாகும் வீடியோ..!!

Mon Jan 27 , 2025
When he saw the child falling, he ran and saved the child. The child reportedly only suffered minor injuries in the incident.

You May Like