fbpx

அடுத்த அதிரடி… சமூக நல வாரியம் கலைப்பு.‌..! தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணை…!

மத்திய அரசின் உத்தரவால் சமூக நல வாரியம் கலைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது. மேலும் கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர் கன்னிகள் ஆகியோரின் பிரச்னைகளை களைவதற்கும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவும், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையிலும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரை தலைவராக கொண்ட வாரியம் அமைக்கப்பட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 10 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

#Holiday: இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!

Wed Sep 7 , 2022
குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த விடுமுறை […]

You May Like