தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 17ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில் படி, தென்மேற்குப் பருவமழை இந்த வாரம் விடைபெற்றுவிடும். அதன்பிறகு காற்று திசை மாற்றம் காரணமாக வடகிழக்குப் பருவமழை தொடங்கும்.
வடமாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும். இருப்பினும், மாநிலத்தின் மத்திய பகுதிகளில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரளம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் தீபகற்பப் பகுதிகள் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும். அக்டோபர் மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களில் தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது.
தமிழகம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக தமிழகத்தின் வட பகுதிகளில் இயல்பு நிலையை விட இந்த ஆண்டு அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more ; பிக்பாஸ் வீட்டில் ஒன்னும் தாக்குப் பிடிக்க முடியல..!! அடுத்து வெளியேறும் போட்டியாளர் இவர் தான்..!!