fbpx

பரபரப்பு…! டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு…!

தடையை மீறி பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உட்பட 686 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட மக்களின் உரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்தும், அந்த இடஒதுக்கீட்டை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகில் நவம்பர் 7-ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி விழிப்புணர்வு பேரணி நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார். இதற்காக காவல் துறை அனுமதியும் பெறப்பட்டது.

பேரணிக்கு கொடுத்த அனுமதியை காவல்துறையினர் திடீரென ரத்து செய்தனர். இதையடுத்து டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென கொட்டும் மழையில் டாக்டர் கிருஷ்ணசாமி சாலையின் நடுவே படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவரது கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இந்த நிலையில் தடையை மீறி பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமி உட்பட 686 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக கூடுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

English Summary

The police have registered a case against 686 people, including Krishnasamy, who participated in the rally and protest in violation of the ban.

Vignesh

Next Post

மக்களே..!! தமிழ்நாட்டில் இன்றும் (நவ.9) மின் கட்டணம் செலுத்தலாம்..!! மின்சார வாரியம் அறிவிப்பு..!!

Sat Nov 9 , 2024
The Tamil Nadu Electricity Board has announced that the public can pay their electricity bills today (November 9).

You May Like