fbpx

தந்தையை அடித்து தூக்கில் தொங்கவிட்ட தாய், மகன்.. வெளியான பகீர் காரணம்.!

மாங்காடு பகுதியில் உள்ள மூகாம்பிகை நகரில் கோவிந்தராஜ் (45) என்பவர் கூலி வேலை செய்பவர். இவர் தன்னுடைய மனைவி உமாராணி மற்றும் 16 வயதில் ஒரு மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவர் மனைவி மாங்காடு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நேரத்தில், பிரேத பரிசோதனையில் கோவிந்தராஜ் தலையில் வெட்டுக்காயம் ஒன்று இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் மனைவி மற்றும் மகனிடம் விசாரித்தனர்.

அவர்கள் கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் வந்த கோவிந்தராஜ் சமையல் செய்து கொடுக்குமாறு மனைவியை போட்டு சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். இதனை பார்த்த மகன் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தலையில் சரமாரியாக அடித்துள்ளார் .இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் தானாகவே தூக்கிட்டு கொண்டது போல வீட்டில் கட்டி தொங்க விட்ட நிலையில், உறவினரின் வீட்டிற்கு மனைவியும், மகனும் சென்றுள்ளனர் . இதனையடுத்து , மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Baskar

Next Post

கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கள்ளக்காதலி கொடூர கொலை..!!

Tue Nov 15 , 2022
வாலாஜாபேட்டை அருகே காட்டுப்பகுதியில் 5 மாத குழந்தையின் தாய் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலன் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளான். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரின் 3-வது மகள் ரேஷ்மாலதா (21). இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தலைப்பிரசவத்துக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு வந்தார் ரேஷ்மலதா. குழந்தை பிறந்த […]
’நாங்க அப்படி இருக்கும்போது என் புருஷன் பாத்துட்டாரு’..!! கணவன் உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசிய மனைவி..!!

You May Like