சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் எனும் இளைஞர் இந்திய ஹாக்கி அணியின் சார்பாக விளையாடுவதற்கு கடந்த மே மாதத்தில் தேர்வாகி இருந்தார். இத்தகைய நிலையில், கார்த்திக் உரியமுறையில் பயிற்சி பெறவும், அடுத்தகட்ட நிலைக்கு செல்வதற்கும் தகுந்த வசதிகள் இன்றி தவித்து வந்தார்.
இவ்வாறு பெற்றோர்களின் வறுமையை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடனே அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை அழைத்து ஹாக்கி வீரர் கார்த்திக்கிற்கு தேவையான உதவிகளைச் உடனடியாக செய்யுமாறு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவின் பேரில் அந்த இளைஞர் வீட்டுக்கே சென்று அமைச்சர், அவரது பெற்றோரை சந்தித்து நிலையைக் கேட்டுள்ளார். மேலும், அவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து வருகிற நவம்பர் 24-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனது கையால் இந்த தொகை, கார்த்திக்கிற்கு வழங்குவார் என்றும் அறிவித்துள்ளார்.
அத்துடன், திறன் மேம்பாட்டுக்கும், விளையாட்டிற்கும் தேவையான உதவிகளை தமிழக அரசு சார்பில் செய்து தரப்படும் என்றும் அமைச்சர் இளைஞரின் குடும்பத்தினரிடம் தெறிவித்துள்ளார்.