திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் இன்று செயல்படும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் மாநகராட்சி, தனியார் சுயநிதி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று வழக்கம் போல செயல்படும். முழு வேலை நாளாக இன்றைய தினம் கடைபிடிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் மாநகராட்சி, தனியார் சுயநிதி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று செயல்படும். முழு வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.