ஒவ்வொரு முறை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் பிரதமர் மோடி தியானம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு பேசுபொருளாகும். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் மோடி தியானம் மேற்கொண்டார். அதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இமயமலையில் கேதர்நாத் குகையில் தியானம் மேற்கொண்டார்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடியும் நிலையில், கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இன்று முதல் 3 நாள்களுக்குத் தொடர்ச்சியாக, 45 மணி நேரம் மோடி தியானம் செய்யவிருக்கிறார். இந்த 3 நாள்களும், பாதுகாப்புப் படையினர், மருத்துவக் குழுவினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே விவேகானந்தர் பாறையில் தங்கி இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இதையொட்டி, 3,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்படையினர், கடலோர காவல் படையினரும் தொடர்ந்து ரோந்து பணியில் சுற்றிக் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் பிரதமர் மோடியின் தியானத்தில் என்ன நடக்கும்? அவர் தியானம் முடித்து கண்ணை திறந்ததும் என்ன நடக்கும்? என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். அதில், 30ம் தேதி தேர்தல் பிரசாரம் முடிந்ததும் மோடியின் கடைசி தேர்தல் பிரச்சார உத்தி இந்த தியானத்தில் இருந்து ஆரம்பமாகும். அங்கே கேமராக்கள் மட்டுமே இருக்கும். 2 ஆயிரம் வீரர்கள் கொண்ட காவல் படை அவரைப் பாதுகாக்கும். அப்பகுதி முழுவதும் மக்கள் நுழையாத வண்ணம் தடுக்கப்படுவார்கள்.
இப்போது கேள்வி என்னவென்றால், தியானம் முடிந்ததும் பையை எடுத்து கொண்டு போவதை பற்றி யோசிப்பாரா? அல்லது புதிய அரசாங்கத்தை எப்படி சட்டத்தின் விதிகளை மீறி உருவாக்கலாம் என்பதை பற்றி சிந்திப்பாரா? என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கிண்டல் செய்துள்ளார்.
Read more ; ரெட் பட நடிகை இப்ப என்ன பண்றாங்க தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!