இன்றைய இளைய தலைமுறையினர் பலர் படைத்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கான செய்தியை நம்முடைய நிறுவனம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதனை பார்த்து பலர் பயன்பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில், தஞ்சை மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியான நாளை தனியார் துறையின் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி, வழிகாட்டு மையம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடத்தப்பட இருக்கிறது. நாளை காலை 8:30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில், இந்த முகாம் நடைபெற இருக்கிறது.
இதில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, செவிலியர்,IIT,diploma degree,BE, போன்ற கல்வித் தகுதி உள்ளவர்கள் பங்கேற்றுக் கொண்டு வேலை வாய்ப்புகளை பெற்று பயன்பெறலாம். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதால், தற்சமயம் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்கள், இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இந்த முகாமில் பங்கேற்றுக் கொள்ள விரும்பும் நபர்கள் இணையதளத்தின் மூலமாக, பதிவு செய்து கொள்ளலாம். இந்த முகம் குறித்த அதிகபட்ச விவரங்களுக்கு 4362-3037, 9499055905, 8110919990 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.