fbpx

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக போக்குவரத்து துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு…..! இத மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க…….!

தமிழக போக்குவரத்து துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். அப்படி வெளியாகும் அறிவிப்பை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கவனித்து, அதன் மூலமாக, பயன் பெற்று அரசு வேலையில் சேர்ந்து பயன் பெறுவார்கள்.

அந்த வகையில், தற்போது தமிழக அரசின் போக்குவரத்து கழகம் ஒரு புதிய வேலைவாய்ப்பு பயிற்சி ஒன்றை அறிவித்திருக்கிறது. இந்த பயிற்சி அறிவிப்பு, apprentice பணிக்காக அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த பயிற்சிக்காக ஒட்டுமொத்தமாக 50 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

ஆகவே இதற்கு தகுதியும், விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சி தேர்வில் பங்கேற்றுக் கொள்ளலாம். இந்த பயிற்சி காலம் 25 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே 5000 முதல் 8000 வரையில் பயிற்சி சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கின்ற கல்வி தகுதி மற்றும் மற்ற தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு படித்த நபர்கள் விண்ணப்பம் செய்யலாம். அத்துடன் இந்த அறிவிப்பு தொடர்பான முழுமையான விபரங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு apprenticeshipindia.org என்ற வலைதளத்தில் சென்று படித்து தெரிந்து கொள்ளலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்

பணிகள்: apprentice

மொத்த காலி பணியிடங்கள்: 50

சம்பளம்:5000-முதல் 8,050

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி: விரைவில் அறிவிக்கப்படும்.

அதிகாரப்பூர்வமான இணையதளம் : apprenticeshipindia.org

பணிகள்:

Electrian,fitter,mechanical, mechanic diecel,welder என்று ஒட்டுமொத்தமாக 50 காலிப்பணியிடங்கள் இருக்கிறது.

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

Next Post

குட் நியூஸ்..!! இனி இன்டர்நெட் இல்லாமல் மொபைலில் டிவி சேனல்கள் பார்க்கலாம்..? மத்திய அரசின் மாஸ் பிளான்..!!

Sat Aug 5 , 2023
டிடிஎச் (DTH) எனப்படும் டைரக்ட் டூ ஹோம் (Direct To Home) சேவையைப் போல டேட்டா இணைப்பு இல்லாமல் செல்போனில் டிவி சேனல்களை நேரடியாக ஒளிபரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. மொபைல் போன் பயனர்கள் கேபிள் அல்லது டிடிஹெச் (DTH) இணைப்பு மூலம் தங்கள் மொபைல் போன்களில் டிவி பார்க்க வழிவகுக்கும் டி2எம் (D2M) எனப்படும் டைரக்ட் டூ மொபைல் (Direct-2-Mobile) தொழில்நுட்பம் குறித்து மத்திய […]

You May Like