கனமழை காரணமாக இன்று புத்தகக் காட்சி நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான 47-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரையும் நடத்தப்படும்.
தென்மேற்கு வங்கக் கடல், தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக இன்று புத்தகக் காட்சி நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.