தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லையான மேட்டூர் அருகே காவிரி நீர்த்தேக்கத்தில் 4 சடலங்கள் மிதந்தன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார், சடலம் கிடந்த இடத்தை பார்வையிட்டனர்.
விசாரணையில், சேலம் மாவட்டம் தாதகாபட்டி நெசவாளர் காலனியை சேர்ந்த யுவராஜ், அவரது மனைவி பான்விழி, மகள்கள் நிதிக்ஷா என்ற நேகா, அக்சரா ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் யுவராஜின் மூத்த மகள் கடந்த 3 ஆண்டுகளாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இளைய மகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் நீரழிவு நோய் இருப்பது தெரியவந்தது.
இதனால், திருமணமான யுவராஜ், பான்விழி இருவரும் தனது பெண் குழந்தைகளையும் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று, தமிழக-கர்நாடக எல்லையான மேட்டூர் அருகே உள்ள அடிபாலாறு என்ற இடத்தில் உள்ள காவிரி ஆற்றில் இரு பெண் குழந்தைகளையும் தள்ளி விட்டு சென்றது தெரிய வந்தது.
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட இரு மகள்களின் பரிதாப நிலையை பார்க்க முடியாமல் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பர்கூர் போலீசார் மற்றும் ஈரோடு மாவட்ட வனத்துறையினர் இணைந்து தண்ணீரில் தத்தளிக்கும் 4 உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.