திருச்சி உறையூர் பகுதியில் ரவுடிகள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடந்த ஒரு நகை கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான ரவுடிகள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரையும் கைது செய்து அழைத்துச் செல்லும் வழியில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள துப்பாக்கியால் சுட்டு இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு ரவுடிகளும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் முறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இச்சம்பவம் பற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவது, ரவுடிகள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த நகைகளை மீட்பதற்காக திருச்சி உறையூர் பகுதியில் குழுமாயி அம்மன் கோயில் அருகே ஜீப் வாகனத்தில் அழைத்து சென்ற போது மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர். அப்போது காவல்துறையை தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள இரண்டு ரவுடிகளின் மீதும் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை பிடித்திருக்கிறது. இந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த இரண்டு ரவுடிகளும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.