மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்திருக்கும் விஜய் மாணவ, மாணவிகளிடையே செல்வாக்கு பெற்ற நபராக இருக்கிறார். அதற்கு காரணம் கடந்த 2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை விஜய் சந்தித்தது தமிழகம் முழுவதும் பேசுபொருளானது. இதற்கிடையே, சமீபத்தில் புதுக்கோட்டையில் நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. தமிழகத்திலேயே முதன்முதலாக மாவட்ட அலுவலகம் புதுக்கோட்டையில் தான் திறக்கப்படுகிறது. இந்த அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கும்போதே, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டோம் என அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில் தான், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், ”இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டு வரை மக்கள் பணி மட்டுமே செய்வோம் என்றும் மக்களும், கட்சி நிர்வாகிகளும் குழப்பிக் கொள்ள வேண்டாம்” எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Read More : குவைத் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு..!! இந்தியர்கள் எத்தனை பேர்..?