fbpx

நீ என்கிட்ட பேசித்தான் ஆகணும் சிறுமியை நள்ளிரவில் டார்ச்சர் செய்த இளைஞர்….! சிறுமி எடுத்த அதிரடி முடிவால் காலையில் இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!

சேலம் அருகே நள்ளிரவில் 13 வயது சிறுமிக்கு போன் செய்த இளைஞர், முதல் இரவு பற்றி ஆபாசமாக பேசி, சிறுமியை டார்ச்சர் செய்ததால் அதிர்ந்து போன சிறுமி, இறுதியில் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?

அதாவது, சேலம் மாவட்டம் அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஆனந்த்(23). இவர் எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியிடம், தன்னுடைய கைபேசி எண்ணை வழங்கி, தன்னிடம் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, மிரட்டி இருக்கிறார்.

இதன் காரணமாக, அதிர்ந்து போன அந்த சிறுமி, என்ன செய்வதென்று தெரியாமல், வேறு வழி இல்லாமல், தன்னுடைய தந்தையின் செல்போனில் இருந்து, அந்த இளைஞரிடம் பேசி இருக்கிறார். அப்போது அந்த சிறுமியிடம் முதலிரவுன்னா என்னன்னு தெரியுமா? என்று கேட்டு, அந்த சிறுமியை தொந்தரவு செய்து இருக்கிறார் அந்த இளைஞர். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து, கதறி அழுதார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்கள். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆனந்தை கைது செய்து, நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி, சிறையில் அடைந்திருக்கிறார்கள்.

Next Post

காலையிலேயே பயங்கரம்…! ஆன்மீக சுற்றுலா ரயில்... மதுரை அருகே தீ விபத்து… 8 பேர் உயிரிழப்பு..!

Sat Aug 26 , 2023
மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு ரயிலின் பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலி. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பாரத் கௌரவ் என்ற ஆன்மீகச் சுற்றுலா ரயில் இன்று அதிகாலை மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த ரயிலின் உள்ள 2 பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 8 […]

You May Like