எங்களை விட்டு போக வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை; நீங்களாகத்தான் போனீங்க; எங்கள் மீது பழி சுமத்தி பயனில்லை என ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
தேனி நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; எங்களை விட்டு போக வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை; நீங்களாகத்தான் போனீங்க; எங்கள் மீது பழி சுமத்தி பயனில்லை. சீனியர் என்கிறீர்கள்; 2001 ஆண்டில் தான் நீங்கள் எம்எல்ஏ; நான் 1989ல் எம்எல்ஏ.., அதிமுக மூழ்கும் கப்பல் இல்லை; கரை சேரும் கப்பல், இதில் வந்தவர்கள் கரையேறலாம்., ஏறாதவர்கள் நடுக் கடலில் போகலாம்.
தமிழகத்தில் போதை பழக்கம் அதிகமாயுள்ளது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டுக்கொள்ளவில்லை. அவர் போட்டோ சூட் நடத்தி வருகிறார். சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அச்சத்துடனே பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
மாணவர்கள் தங்களை அப்பா என்று அழைப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், பாதிக்கப்படும் சிறுமிகள் அப்பா என்று அழைப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? தருமபுரி திமுக நிர்வாகி மாவட்ட ஆட்சியரை மிரட்டுகிறார். அதிகாரிகள் நேர்மையாக செயல்பட நினைத்தாலும், இவர்களைப் பார்த்து அச்சப்படுகின்றனர் என்றார்.