fbpx

“பாஜகவுடன் தான் கூட்டணி, மீண்டும் வருவோம்”.. குலதெய்வ வழிபாட்டிற்கு பின் OPS நம்பிக்கை.!

வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இடையே கூட்டணி இல்லை என்ற முடிவே நிலவி வருகிறது. பாரதிய ஜனதா மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் தங்களது தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க தமிழகத்தில் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் ஓ.பன்னீர்செல்வம்(OPS) பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவாளர்களுடன் அதிமுக உரிமை மீட்பு குழு என்ற பெயரில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து வரும் அவர் பத்தாண்டுகள் இந்தியாவிற்கு சிறப்பான ஆட்சியை வழங்கிய மோடிக்கு தான் தனது ஆதரவு என தெரிவித்திருக்கிறார். மேலும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலிலும் தங்களது அணி மோடியுடன் இணைந்து கூட்டணி அமைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதில் எந்தவித மாற்று கருத்துக்கும் இடமில்லை என அவர் உறுதியாக கூறி இருக்கிறார்.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரும் தங்கள் அணியுடன் இணைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போராடி இழந்த உரிமையை மீட்டெடுப்போம் எனவும் கூறி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் அவர் தனது குலதெய்வ கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார்.

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி ஓபிஎஸ் வைத்து வந்த நிலையில் அவர் தனது கட்சியை சேர்ந்தவர் இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்ததால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி ஆர்பி உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டது. இது ஓபிஎஸ் அரசியல் வாழ்வில் ஒரு சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற தனது தர்மயுத்தத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் அவர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து தனது குலதெய்வ கோவிலான ஸ்ரீவில்லிபுதூர் வலை பேச்சி அம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் ஈடுபட்டு இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த பூஜைகளை முடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வர இருக்கின்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்தி மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

English Summary:
We will regain admk O. Paneerselvam confident about getting into power

Next Post

முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உதவித்தொகை (Allowance) ரூ.1,500/- ஆக உயர்வு.! அரசு புதிய அறிவிப்பு.!

Sun Feb 18 , 2024
தமிழக அரசின் சார்பில் முதியோர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு உதவித்தொகையாக(Allowance) ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த உதவிகளை அரசு வழங்கி வருகிறது. மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு 1700 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட்டு புதிய அரசாணை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. […]

You May Like