சேலம் மாவட்ட பகுதியில் உள்ள பாப்பாம்பாடியில் வெல்டிங் வேலை பார்க்கும் ராஜா என்பவர் தனது மனைவி பிரியா மற்றும் பிரஷிதா என்ற மகள் மற்றும் பிரவிஷ் என்ற மகனுடன் வசித்து வந்துள்ளார்.
மகன் பிரவிஷ் அதே பகுதியிலுள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜா தன்னுடைய குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகிலிருக்கும் விவசாய கிணற்றுக்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து ராஜாவும் மகன் பிரவிஷும் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மகன் ராஜாவின் கழுத்தை இறுக பிடித்துக் கொண்டதால் அவரால் நீச்சல் அடிக்க முடியவில்லை.
சிறிது நேரத்திலே இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மகள் மற்றும் மனைவி காப்பாற்றுங்கள் என கத்தியுள்ளார். அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து இருவரையும் தேடி பார்த்துள்ளனர்.
இது பற்றி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு படையினர் தந்தை மற்றும் மகனின் உடல்களை மீட்டனர். பிறகு உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.