fbpx

#திருச்சி: கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி..திடுக்கிடும் தகவல்..!

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த ஆக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமர் மற்றும் அவரது மனைவி கண்மணி. ராமர் சென்னையில் வியாபாரம் செய்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை திருச்சி-மதுரை சாலையில் ராமர் பலத்த காயங்களுடன் கிடந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராம், கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். ராமின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ராமின் சக ஊழியரான அருள்குமாரை கைது செய்தனர். இதனால் ராமரின் மனைவி கண்மணிக்கும், அருள்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ஆத்திரமடைந்த ராமர் கண்மணியை கடுமையாக தாக்கினார். இதுகுறித்து கண்மணி உடனே அருள்குமாரிடம் கூறினார். அருள்குமார் ராமிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அருள்குமார் ராமை இரும்பு கம்பியால் அடித்து கொன்றது தெரியவந்தது.

இந்த சதிக்கு கண்மணியும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

உறவினர்கள் சடலங்களை தெருக்களில் தகனம் செய்யும் பரிதாப நிலை..! 

Thu Jan 5 , 2023
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், சுடுகாட்டில் சடலங்கள் குவிந்து கிடப்பதால், தகனம் செய்ய முடியாமல் மக்கள் தங்கள் உறவினர்களை தெருவில் தகனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா இல்லாத சமூகத்திற்கான சீன நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த மாதம் திடீரென ரத்து செய்யப்பட்டன. எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் திடீரென கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், பாதிப்புகளின் […]

You May Like