fbpx

#சென்னை :கடல் சீற்றத்தில் காணாமல் போன கணவரை தேடி அலைந்த மனைவி.. மனதை உறுக்கும் காட்சி..!

தற்சமயத்தில் மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னை உத்தண்டி மற்றும் பல பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதில் பேபி அவின்யூ, ஜீவா தெரு, விஜிபி 2வது தெருகள் உள்ளிட்ட இணை தெருக்களிலும் கடல் நீரானது குடியிருப்பு பகுதியிலும் உட்புகுந்துள்ளது.

இந்த நிலையில் பலத்த காற்று வீசி வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இப்பகுதியில் 3 முதல் 4 மீட்டர் வரைதான் கடல் சீற்றம் இருக்கும். ஆனால் தற்போது 7 முதல் 8மீ வரை இருக்கிறது. மேலும் இந்த பகுதியில் மீனவ மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனா்.

இவ்வாறு இருக்கின்ற நிலையில், பெண் ஒருவர் அழுது கொண்டே தனது கணவரை தேடி சென்ற காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தனது கணவரை மாலை முதல் காணவில்லை என்றும் அவரை தேடியே அங்கும் இங்குமாய் சென்றுள்ளார்.

கடல் சீற்றத்தால் இந்த பகுதி அபாயகரமான பகுதி யாரும் வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வைத்துள்ளனர். ஆனால் இந்த பெண் தனது கணவரை காணவில்லை என்று அலைந்து தேடி போன காட்சிகள் காண்போரின் கண்களில் இருந்து கண்ணீரை வரவைத்துள்ளது.

Baskar

Next Post

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

Sat Dec 10 , 2022
சில தினங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி திடீரென்று தீவிர புயலாக உருமாறி அதன் பிறகு புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வந்தது.இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. நேற்று இரவு 9 முதல் ஆரம்பமான காற்றின் தாக்கம் இன்று அதிகாலை 3 மணியளவில் சற்றேற குறைய முடிவுக்கு வந்தது, இதற்கு பின்னர் லேசான காற்றே வீசியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் எதிர்வரும் […]

You May Like