fbpx

மெகா இன்பச் செய்தி…; 9 முதல் 10-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு ரூ.75,000 உதவித்தொகை…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்….!

மாணவ,மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின்‌ PM-YASAVI திட்டத்தின்‌ கீழ்‌ 2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின்‌ கிழ்‌ தேர்வு செய்யப்படும்‌ 9 மற்றும்‌ 10-ம்‌ வகுப்பு மாணவ, மாணவிர்களுக்கு ஆண்டொன்றுக்க தலா ரூ.75,000 வீதமும்‌,11 மற்றும்‌ 12-ம்‌ வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டொன்றுக்கு தலா ரூ.1,25,000 வழங்கப்படும்‌.

பிற்படுத்தப்பட்டோர்‌ மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ சீர்மரபினர்‌ பொருளாதாரத்தில்‌ பின்தங்கியோர்‌ இனங்களை சேர்ந்தவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. பெற்றோர்‌ அல்லது பாதுகாவலரின்‌ ஆண்டு வருமானம்‌ ரூ.2,50,000-க்குள்‌ இருத்தல்‌ வேண்டும்‌. விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களாக அலைபேசி எண், ஆதார்‌ எண்ணுடன்‌ இணைக்கப்பட்ட வங்கிக்‌ கணக்கு, வருமான சான்று, சாதிச்சான்று, ஆதார்‌ அட்டை உள்ளிட்டவை இருக்க வேண்டும். தேசிய தேர்வு அமைப்பால்‌ கணினி வழியாக 11.09.2022 அன்று நடத்தப்பட்டு தேர்வில்‌ வெற்றி பெறும்‌ மாணவ, மாணவியர்கள்‌ அடிப்படையில்‌ தேர்ந்தெருக்கப்படுவர்‌.

தமிழ்நாட்டினை சேர்ந்த 1547 மாணவர்கள்‌ தேர்வு செய்ய குறியீடு நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. இத்திட்டததில்‌ விண்ணப்பிக்க https://yet.nta.ac.in/ என்ற இணையதளத்தில்‌ 26.08.2022 வரை விண்ணப்பிக்கலாம்‌. விண்ணப்பங்களில்‌ குறைகள்‌ ஏதும்‌ இருப்பின்‌ 27.08.2022 முதல்‌ 31.08.2022 வரை திருத்தம்‌ செய்து கொள்ளலாம்‌. தேர்வர்களின்‌ அனுமதிச்சீட்டு விவரங்களை05.09.2022 அன்று முதல்‌ தெரிந்து கொள்ளலாம்‌.இத்திட்டம்‌ தொடர்பான மேலும்‌ விபரங்களுக்கு https://socialjustice.gov.in/ என்ற இணையதளத்தளம்‌ வாயிலாக தெரிந்து கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

பயங்கர எச்சரிக்கை... இந்த அறிகுறிகள் இருந்தா உங்க குழந்தைக்கு தக்காளி காய்ச்சல் உறுதி...! பெற்றோர்கள் கவனமா இருங்க...!

Fri Aug 26 , 2022
தக்காளி காய்ச்சல் கேரளா, தமிழ்நாடு, ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் காய்ச்சல் பதிவாகியுள்ளது. செவ்வாயன்று, மத்திய சுகாதார அமைச்சகமும் நோய்க்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், இந்த நோயில், ஒரு தக்காளி போன்ற ஒரு வட்ட சொறி பகுதி, உடலில் உருவாகிறது. காய்ச்சல், க்ஷ மூட்டுகளில் வலி, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. மற்ற அறிகுறிகளாக நீரிழப்பு, குமட்டல், வாந்தி மற்றும் சோர்வு ஆகும். இந்த நோய் குடல் வழியாக பரவும் ஒரு […]

You May Like