fbpx

“வீட்டுக்கு வா, நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” ஆசையாய் சென்ற வாலிபர்.. நெல்லையை உலுக்கிய கொடூர சம்பவம்…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர், விஜய். தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் விஜய்க்கு, பாளையங்கோட்டை அருகே உள்ள அண்ணா தெருவைச் சேர்ந்த ஜெனிபர் சரோஜா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களின் செல்போன் எண்களைப் பரிமாறி, கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலியில் இருந்து தனது காதலனின் ஊரான கள்ளக்குறிச்சிக்கு, அவரது காதலனை பார்க்க ஜெனிபர் சரோஜா சென்றுள்ளார்.

தனது வீட்டிற்க்கு வந்த ஜெனிபரிடம், விஜய், தனது சகோதரி கணவரைப் பிரிந்து தன்னுடன் வசித்து வருவதால், தற்போது தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும், சிறிது நாட்கள் கழித்து, தனது குடும்பத்தினரை அழைத்து வந்து பெண் கேட்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, ஜெனிபர் தனது வீட்டிற்க்கு கிளம்பியுள்ளார். இதனிடையே, ஜெனிபர் தனது காதலனைத் தேடி கள்ளக்குறிச்சிக்கு சென்றது ஜெனிபரின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவரது பெற்றோர், காதலை கைவிட்டு விடுமாறு கூறியுள்ளனர். ஆனால், தான் விஜய்யை மட்டும் தான் திருமணம் செய்வேன் என்று அவர் உறுதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெனிபர் வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனது தங்கையின் தற்கொலை முயற்சிக்கு, விஜய் தான் காரணம் என ஆத்திரமடைந்த அவரது அண்ணன் சிம்சன், விஜய்யை, திருநெல்வேலிக்கு வருமாறும், வீட்டில் பேசி நான் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறி அழைத்துள்ளார். இதனால் மிகுந்த சந்தோசம் அடைந்த விஜய், நெல்லைக்கு வந்துள்ளார். அங்கு அவர்களின் வீட்டிற்க்கு வந்த விஜய்க்கும், சிம்சனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிம்சன், தனது நண்பர் சிவாவுடன் சேர்ந்து கட்டை, அரிவாள் உள்ளிட்ட பொருட்களால் விஜய்யை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விஜய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சிம்சன் மற்றும் அவரது நண்பன் சிவாவை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more: உங்கள் குழந்தைகள் எந்த நோயும் இல்லாமல், ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?? அப்போ இந்த ஒரு உணவு போதும்…

English Summary

young-man-honor-killed-by-his-lovers-brother

Next Post

புயல் பாதிப்பு... அரசு இயந்திரம் ஏன் இடைத்தேர்தல் பாணியில் செயல்படவில்லை?‌

Wed Dec 4 , 2024
Why didn't the government carry out the storm relief work in a 'by-election' style? - Question from Vck

You May Like