fbpx

#டெல்லி:முடி மாற்று சிகிச்சையில் உயிரை இழந்த இளைஞர்..! 

டெல்லி மாநகர பகுதியில் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஆதர் ரஷீத் என்ற 30 வயது இளைஞர் வசித்து வருகிறார். சில மாதங்களாக தலை முடி அதிகம் கொட்டுகிறது என முடி மாற்று அறுவை சிகிசை செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ரஷீத் இருந்துள்ளார். 

சென்ற ஆண்டு முடி மாற்று சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையின் விளம்பரத்தை பார்த்த ரஷீத் அங்கு சென்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். முடி மாற்று சிகிச்சை முடிந்த சில நாட்களிலே செப்சிஸ் என்று சொல்லப்படும் பாக்டீரியா தொற்றானது அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. 

இதன் காரணமாக ஏற்பட்ட காயங்கள் ஆறாமல் அழுகி ரத்தத்தில் நச்சுத்தன்மையை கலந்திருக்கிறது. இதனை தொடர்ந்து சிறுநீரகம் செயலிழந்து, பிறகு படிப்படியாக மற்ற உறுப்புகளும் செயலிழக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ரஷீத் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

முடி மாற்று சிகிச்சை அளித்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்க அவரின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ரஷீத்திற்கு அறுவை சிகிச்சை செய்தவர் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Baskar

Next Post

மாணவர்களை கழிவறை சுத்தம் செய்யச் சொன்ன தலைமை ஆசிரியை..! கைது செய்த காவல் துறையினர்!!!

Sun Dec 4 , 2022
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வெகுகாலமாக செயல்பட்டு வருகிறது. அந்த தொடக்கப்பள்ளியில் 33 மாணவ, மாணவிகள் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பள்ளியில் இரு கழிவறைகள் இருக்கின்றன. அதில் ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொரு கழிவறையை மாணவர்களும் பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த கழிப்பறைகளை நாள்தோறும் 2 மாணவர்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியை கீதாராணி அறிவுறுத்தியதாக தெரிகிறது. தலைமை ஆசிரியரின் […]

You May Like