BREAKING | தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்குகள் மூடல்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதனையொட்டி, அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர், பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியும் இன்று (10.04.2024) தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்குகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, அரசு-தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெடிக்கல், மளிகை கடைகள் போன்றவை வழக்கம்போல் செயல்படும் என்பதால், மக்கள் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Read More : ’விவாகரத்தான பெண்களுக்கு செக்..!! முன்னாள் கணவர்கள் நிம்மதி’..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

Chella

Next Post

எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி..!! அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி..!!

Wed Apr 10 , 2024
கர்நாடகாவில் அதிமுகவை ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டி கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிற மாநிலங்களில் ஏன் அதிமுகவை வளர்க்க வேண்டும் என மேலிடம் நினைப்பதாக கர்நாடகா நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர். மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதை கூட கட்சி மேலிடம் கூற மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு பிறகு […]

You May Like