கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சென்மபசப்பா, ஒரு சிமெண்ட் தொழிற்சாலையில் தொழிற்சங்கத் தலைவராக பணியாற்றி வருகிறார். அவருடைய மகள் பாக்கியஸ்ரீ (வயது 20) 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், அடுத்த மாதம் பெங்களூரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் சேர இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாக்கியஸ்ரீ மற்றும் அவருடைய அக்கா இருவரும் வழக்கம் போல் நடை பயிற்சிக்கு சென்றிருந்தனர். அப்போது பாக்கியஸ்ரீயின் அக்கா மளிகைக் கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். உடன் சென்ற பாக்கியஸ்ரீ சிறிது நேரத்தி அங்கே இல்லை என்று கண்டார். வீட்டிற்கு சென்றிருப்பார் என நினைத்த நிலையில், வீட்டிற்கும் வரவில்லை. இதையடுத்து காணாமல் போனதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே நேற்று காலை சிமெண்ட் தொழிற்சாலையின் அருகே உள்ள கால்வாயில் பாக்கியஸ்ரீ உடல் அழுகிய நிலையில் கிடந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், யாரோ இரும்புக் கம்பியால் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
விசாரணையின் போது, மஞ்சுநாத் என்பவர் பாக்கியஸ்ரீயை கொன்றதை ஒப்புக் கொண்டார். போலீசார் அளித்த தகவலின்படி, மஞ்சுநாத்தின் அண்ணன் வினோத் அதே சிமெண்ட் தொழிற்சாலையில் வேலை செய்தார். தொழிற்சங்கத் தலைவரான சென்மபசப்பா அவருக்கு பணி நிரந்தரமாக வழங்காததால், மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இதனைப் பற்றி வினோத் தனது குடும்பத்திடம் கூறி வந்த நிலையில், கடைசியில் தற்கொலை செய்தார். தற்கொலைக்கு காரணமான சென்மபசப்பாவை பழிவாங்க மஞ்சுநாத் திட்டமிட்டு, அவரது மகளை கடத்தி, தலையில் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: புற்றுநோய்க்கான அதிசய மருந்து இந்த மரத்தின் இலையில் உள்ளது! புதிய ஆய்வில் வெளியான குட்நியூஸ்!