அரசு விடுதியில் மாணவனை நிர்வாணப்படுத்தி, செருப்பால் அடிப்பதை முதல்வரால் Justify செய்ய முடியுமா? இபிஎஸ் காட்டம்!

stalin eps

மதுரை அருகே அரசு மாணவர் விடுதியில் மாணவர் தாக்கப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசு விடுதியில் ஒரு மாணவனை நிர்வாணப்படுத்தி, செருப்பால் அடித்து தாக்கப்படுவதை இந்த பொம்மை முதல்வரால் Justify செய்துவிட முடியுமா?


“சமூகநீதி விடுதிகள்” என்று பெயர் வைப்பதால் வருவது அல்ல. அந்த விடுதிகளின் நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும் சமூகநீதி என்பது இருக்க வேண்டும். இதனை பொம்மை முதல்வர், அவர் தலைமையிலான விளம்பர மாடல் அரசும் எப்போது தான் உணரப் போகிறது? அரசு விடுதியில் உள்ள மாணவர்களுக்கு இடையே கூட இணக்கமான சூழலை அமைத்திட முடியாத அரசாக இன்றைய விடியா திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது. அரசு விடுதிகள் தான் இப்படி என்றால், இந்த ஆட்சியில் அரசுப்பள்ளிகளுமே பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கின்றன.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் ஓராண்டுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததாக செய்திகள் வந்தன. மாணவர்கள் உள்ளே இருந்திருந்தால் அவர்கள் உயிருக்கே ஆபத்தாகி இருக்காதா? பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் நடந்த இந்த அவலத்திற்கு என்ன பதில் வைத்துள்ளது இந்த ஸ்டாலின் மாடல் அரசு? திமுக அரசின் கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன் கொள்ளைக்கு, மாணவர்கள் உயிரை பணயம் வைப்பது கண்டனத்திற்குரியது. கல்வி ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும். ஒழுக்கம், சமத்துவத்தை நிலைநாட்ட வழிவகுக்கும். இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சி, கல்வி மற்றும் அதற்கான கட்டுமான வசதிகள் உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களை நெறிப்படுத்த முடியாததால் தான் இத்தகைய பிரச்சனைகள் வருகின்றன.

நடந்து செல்வதை Reels போடுவதில் இருக்கும் முனைப்பை, மாணவர்களுக்கு சுய ஒழுக்கத்தைப் பேணும் கல்வியை வழங்குவதை உறுதி செய்வதிலும், அரசுப்பள்ளிகளைத் தரமாகக் கட்டமைப்பதிலும், அரசு மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் மேற்கொண்டு முறையாக நிர்வகிப்பதிலும் காட்ட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : இந்த 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.!

RUPA

Next Post

30 ஆண்டுகளில் முதன்முறை..! சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் ஷாருக்கான்!

Tue Sep 23 , 2025
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.. சிறந்த இயக்குனர், சிறந்த ஓலிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த நடிகர், சிறந்த இசை போன்ற பல துறைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.. தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி […]
shahrukh khan

You May Like