சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு… பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்…! அன்புமணி அதிரடி…

anbumani pmk 2025

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி வரும் டிசம்பர் 17ம் தேதி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2008-ம் ஆண்டின் புள்ளி விவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளுக்கு சாதிவாரி சர்வே நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி தான் பல மாநிலங்கள் சாதிவாரி சர்வேயை நடத்தி முடித்துள்ளன; நடத்தி வருகின்றன. சாதிவாரி சர்வே நடத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்பதை கர்நாடகா, பிஹார் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. உச்சநீதிமன்றமும் இதே நிலைப்பாட்டைத் தான் கொண்டிருக்கிறது. அதனால் தான் பிஹார் மற்றும் தெலங்கானா அரசுகள் சாதிவாரி மக்கள் தொகை சர்வேயின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தது மட்டுமின்றி ஏராளமான நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் சாதிவாரி சர்வே நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஸ்டாலின் அரசு கூறுவது ஏமாற்று வேலையாகும்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தேவைகளை திமுக அரசு உணரவில்லை என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன். மாறாக, தமிழக மக்களுக்கு சமூக நீதி கிடைத்து விடக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது; சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதன்படி தமிழ்ச் சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்து வழங்குதல் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் தான், சமூக நீதியில் விருப்பம் இல்லாத திமுக அரசு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மறுத்து வருகிறது. இது தான் உண்மை.

1989-ம் ஆண்டில் தொடங்கி, 2021-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு 3 வாய்ப்புகள் ஏற்பட்டன. அந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது பாமக. ஆனால், அந்த 3 வாய்ப்புகளையும் சிதைத்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவிடாமல் செய்தது திமுக அரசு. 36 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நீதிக்கு எதிராக திமுக எவ்வாறு சதி செய்து வருகிறது என்பதற்கு இவற்றை விட மோசமான எடுத்துக்காட்டுகள் எதுவும் இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், உடனடியாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரியும் பாமக சார்பில் வரும் டிசம்பர் 17ம் தேதி புதன்கிழமை சென்னை எழும்பூர் ராசரத்தினம் திடல் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு வசதியாகவும், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை இன்னும் வலிமையாகவும், பிரமாண்டமாகவும் வலியுறுத்துவதற்கு வசதியாகவும் டிசம்பர் 17ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டத்தை 2026ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி வியாழக்கிழமை நடத்துவதற்கு பாமக முடிவு செய்திருக்கிறது என தெரிவித்துள்ளார் ‌

Vignesh

Next Post

மறுமணம் செய்யப் போறீங்களா..? ரூ.50,000 + ஒரு சவரன் தங்கம் பெறுவது எப்படி..? தமிழ்நாடு அரசு அசத்தல் திட்டம்..!!

Wed Nov 26 , 2025
தமிழ்நாடு அரசு, சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் உட்பட பலதரப்பட்ட மக்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களின் பொருளாதார வலுவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றில், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை ஊக்குவித்து, அவர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டம் தான் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் […]
Marriage 2025 1

You May Like