மீனவ இளைஞர்கள் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ‌ ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான பதவிகளுக்கான போட்டித்தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. வருடத்திற்கு ஒரு முறை என்ற அடிப்படையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் தேர்வர்கள் இத்தேர்வை எழுதி வருகிறார்கள். இந்திய அளவில் உயரிய பதவிகளுக்கு நடத்தப்படும் கடுமையான தேர்வாக இத்தேர்வு உள்ளது. […]

உலகின் சிறந்த நகரங்களின் புதிய உலகளாவிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது, மேலும் லண்டன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் உலகளாவிய மாற்ற சகாப்தத்தின் மத்தியில், ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆலோசகரான ரெசோனன்ஸ் கன்சல்டன்சி மற்றும் அதன் ஆராய்ச்சி கூட்டாளியான இப்சோஸ் ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்களை உலகளவில் 100 நகரங்களை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளன. Resonance Consultancy மற்றும் […]

20 ஆண்டுகள் பழைய வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த சட்டத்திருத்தங்கள் அமலாகியுள்ளன. அதன்படி, ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் வயதைப் பொறுத்து தகுதி சான்றிதழ் […]

துபாயில் விபத்துக்குள்ளான தேஜாஸ் ஜெட் விமானத்தின் விமானியான விங் கமாண்டர் நமன்ஷ் சியாலின் கடைசி காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி விங் கமாண்டர் நம்னாஷ் சியால் உயிரிழந்தார். துபாயின் அல் மக்தூம் விமான நிலையத்தில் ஒரு டெமோ விமானத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்துக்கான காரணத்தை விசாரிக்க இந்திய விமானப்படை விசாரணை நீதிமன்றத்திற்கு […]

தமிழகத்தில் இன்று டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாகநீடிக்கிறது. தெற்கு அந்தமான்கடல், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் […]

மத்திய அரசு இன்று ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்திய 4 தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) உடனடி அமலுக்கு வருவதாக அறிவித்தது. இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முடிவாக பார்க்கப்படுகிறது.. 4 தொழிலாளர் குறியீடுகள் என்னென்ன : ஊதியக் குறியீடு, 2019 (Code on Wages, 2019) தொழில்துறை உறவுகள் குறியீடு, 2020 (Industrial Relations Code, 2020) […]

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் […]

கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏவாகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம்.. கடந்த 2005-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 9-ம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் சுதர்சனம் பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. பெரியபாளையம் அருகே தானாகுளத்தில் உள்ள அவரின் வீட்டின் கதவை உடைத்து எம்.எல்.ஏ சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதுடன், அவரின் மனைவி மகன்களை தாக்கி அவரின் வீட்டில் இருந்து 62 சவரன் நகைகளை […]

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் கௌரி திரிபன்பூர் கிராமத்தில் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு, கணவரே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தகவல்களின்படி, ஒரு கணவர், தனது மனைவிக்கு குடும்ப உறவினர் ஒருவருடன் கள்ள உறவு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இந்த சந்தேகம் ஆழமடைந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், கோபத்தின் உச்சியில் இருந்த கணவர், ஒரு […]