மத்திய அரசு புதிய வாகன விதியை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத அனைத்து வாகன உரிமையாளர்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.. புதிய மோட்டார் வாகன விதி அங்கீகரிக்கப்பட்டால், சுங்கக்கட்டணம் பாக்கி நிலுவையில் இருந்தால், வாகன ஓட்டிகள், பதிவு புதுப்பித்தல், காப்பீடு, உரிமை பரிமாற்றம் அல்லது தகுதி சான்றிதழ்கள் போன்ற முக்கியமான சேவைகளைப் பெற முடியாது. இந்த நடவடிக்கை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.72,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் […]

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவின் டி.எஸ்.பி சுந்தரேசன், அலுவலக வாகனம் இல்லாமல் நடந்தே பணிக்குச் சென்ற வீடியோ வைரலான நிலையில், நேர்மையாக இருப்பதால் தான் தனக்கு இத்தனை சிக்கல் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கொலை வழக்கிலும், பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான என்கவுன்டரிலும் விசாரணை செய்ததற்குப் பின்னர், சுந்தரேசன் மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பொறுப்பேற்றதிலிருந்து கள்ளச்சாராயம், மதுபான […]

கோவையில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். சூலூரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் தனியார் கோயில் நிதி பிரச்சனையை தீர்த்து வைக்க அற நிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் ரூ.1.5 லட்சத்தை முதலில் கொடுப்பதாக கூறியுள்ளார். ரசாயணம் தடவிய லஞ்ச பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச […]

திருவள்ளூர் மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் இரும்பு உற்பத்தி ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர், தீ அருகிலுள்ள பிற கட்டமைப்புகளுக்கும் பரவி வருவதால் உயிரிழப்பு ஏற்படும் அச்சம் நிலவுகிறது. செய்தி நிறுவனமான PTI பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான கரும்புகையுடன் தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் காட்டுகிறது. தொழிற்சாலையில் உள்ள பெரும்பாலான பொருட்கள் […]

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரின் மத்தியில் , இரு நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக, ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 1,000 வீரர்களின் உடல்களை உக்ரைன் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, உக்ரைன் 19 ரஷ்ய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளது. இந்த பரிமாற்றம் குறித்து ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி உறுதிப்படுத்தினார். எங்கள் […]