அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் 800-க்கும் மேற்பட்டோருக்கு திட்டமிடப்பட்டிருந்த தூக்குத் தண்டனைகளை ரத்து செய்ததற்காக, அந்த நாட்டின் ஆட்சியை எதிர்பாராத விதமாக பாராட்டியுள்ளார். டிரம்பின் இந்த கருத்து, நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள் தற்போது தணிந்துவரும் நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாரா-லாகோ இல்லத்திற்கு புறப்படுவதற்கு முன், ஈரான் எடுத்த இந்த […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.. நடிகராக மக்களின் பேரன்பை பெற்ற எம்ஜிஆர், அரசியலில் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்கு வகித்தவர்.. புரட்சி தலைவர் என்ற பெயர் பெற்ற எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை வழங்குவோம் என்று இன்றும் பல அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.. எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை அதிமுக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. மேலும் அவரின் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நவீன காலத்தில் வயர்லெஸ் இயர்போன்கள் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. அலுவலக அழைப்புகள் முதல் இசை, சமூக ஊடகங்கள் வரை, இந்த சாதனங்கள் மணிக்கணக்கில் காதுகளில் அணிந்திருக்கின்றன. புளூடூத் இயர்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா? அதனால் புற்றுநோய் ஏற்படுமா? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றை அணிவது உங்கள் தலைக்கு அருகில் ஒரு மைக்ரோவேவ் அடுப்பை வைத்திருப்பதற்குச் சமம் என்பது போன்ற வதந்திகளும் இணையத்தில் […]
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. சைபர் குற்றங்கள் குறித்துப் புகார் அளிப்பதற்காக, மத்திய அரசு நாட்டின் அனைத்து மக்களுக்கும் சைபர் குற்றப் புகார் இணையதளத்தை எப்போதும் பயன்பாட்டில் வைத்துள்ளது. அதற்கான செயலியையும் அது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சைபர் குற்றங்கள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டால், காவல்துறை உடனடியாகப் பதிலளித்து நடவடிக்கை எடுக்கிறது. அதிகரித்து வரும் சைபர் குற்றங்களின் […]
உலக நாடுகளின் பயணச் சுதந்திரத்தையும், அந்தந்த நாடுகளின் பாஸ்போர்ட் வலிமையையும் அளவிடும் ‘ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு’ (Henley Passport Index) சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் ராஜதந்திர உறவுகள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாடுகளுடனான நற்பெயர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் தரவரிசைப் பட்டியலில், உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடாக சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் […]
வருங்கால வைப்பு நிதி (EPFO) சந்தாதாரர்களுக்கு ஒரு மிக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை பிஎஃப் (PF) தொகையைப் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய தொழிலாளர் அமைச்சகம் அதிரடி மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகையை யுபிஐ மூலமாக நேரடியாகவும், உடனடியாகவும் வங்கி கணக்கிற்கு […]
இந்தியாவின் நிதித்துறையில் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரிய அடையாளமாக திகழ்வது மத்திய அரசுக்கு சொந்தமான எல்ஐசி (LIC) நிறுவனம். பல தசாப்தங்களாக நடுத்தரக் குடும்பங்களின் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான “Safe Haven” ஆக விளங்கும் இந்த நிறுவனம், அண்மையில் சமூக வலைதளங்களில் ஒரு காரசாரமான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. பியூஷ் டிரேட்ஸ் என்பவர் தனது உறவினரின் 20 ஆண்டு கால எல்ஐசி முதலீட்டு அனுபவத்தைப் பகிர்ந்துள்ள பதிவு, முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு புதிய […]
பிறப்புச் சான்றிதழ் என்பது பாஸ்போர்ட் எடுப்பது முதல் பள்ளிச் சேர்க்கை, சொத்துரிமை, திருமணம் என ஒவ்வொரு கட்டத்திலும் இந்த ஆவணம் இன்றியமையாததாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சான்றிதழில் பெயர் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், அது வருங்காலத்தில் பெரும் சட்ட சிக்கல்களை உருவாக்கக்கூடும். எனவே, பிறப்புச் சான்றிதழில் உள்ள திருத்தங்களை சீர் செய்யவும், முறைப்படி பெயர் மாற்றம் செய்யவும் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகளை இங்கே விரிவாக காண்போம். […]
சுவையான இனிப்பு என்ற பிம்பத்தை தாண்டி, ‘டார்க் சாக்லேட்’ என்பது ஒரு ஊட்டச்சத்துப் பெட்டகம் என்றே கூறலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அத்தியாவசியத் தாதுக்கள் நிறைந்த இதனை மிதமான அளவில் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது, இதய நலம் முதல் மனநலம் வரை வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் டார்க் சாக்லேட்டின் தனித்துவமான மருத்துவப் பலன்களை இங்கே விரிவாகக் காண்போம். எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு டார்க் சாக்லேட் […]

