வடக்கு சைப்ரஸ் கடற்கரை அருகே சுமார் 270 பயணிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 237 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை, கைரேனியா துறைமுகத்தில் இருந்து துருக்கியின் தசுக்கு (Tasucu) துறைமுகத்திற்குச் சென்ற ‘காடமரன்’ (Catamaran) வகைப் படகு விபத்துக்குள்ளானது. படகு புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே, மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாகப் படகில் நீர் புகத் தொடங்கியது. டயானா கடற்கரையிலிருந்து […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உஸ்பெகிஸ்தானில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய தேசிய விருதான ‘ஓலே தாராஜாலி தோஸ்ட்லிக்’ (Oliy Darajali Do’stlik) வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால அடிப்படையில் யுரேனியம் சப்ளை மற்றும் 5 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு உட்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ், பிரதமர் மோடிக்கு இந்த உயரிய விருதை வழங்கினார். இது பிரதமர் […]
வீட்டில் அதிக நேரம் பயன்படுத்தப்படும் இடங்களில் சமையலறையும் ஒன்று. தினமும் காலை முதல் இரவு வரை உணவு தயாரிப்பது, பாத்திரங்களை சுத்தம் செய்வது, உணவுப் பொருட்களை சேமிப்பது என பல்வேறு வேலைகள் இங்கு நடைபெறுகின்றன. இதனால் சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் எங்கு வைக்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இடத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக பலரும் அடுப்பு, சிங்க் அல்லது ஜன்னலுக்கு அருகில் பொருட்களை வைத்துவிடுகின்றனர். ஆனால், […]
ஆன்லைன் கேமிங் செயலிகளைத் தொடர்ந்து, தற்போது ஆபாச இணையதளங்கள் மற்றும் பிரத்யேக என்க்ரிப்ட் (encrypted) செய்யப்பட்ட ரகசிய செயலிகள் மூலம் பயங்கரவாதிகள் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதை இந்தியப் பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்டறிந்துள்ளன. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் பயங்கரவாத அமைப்புகள், ஜம்மு காஷ்மீரில் ஆள்சேர்ப்பு மற்றும் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இத்தகைய ரகசிய வழிகளைப் பயன்படுத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், […]
இட்லி, பஜ்ஜி, கேக் போன்ற உணவுப் பண்டங்களை மென்மையாக்க உதவும் சமையல் சோடா (சோடியம் பைகார்பனேட்), சமையலுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு அன்றாட உடல்நலப் பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருளாக செயல்படுகிறது. இயற்கையிலேயே காரத்தன்மை கொண்ட இது, உடலில் ஏற்படும் அதிகப்படியான அமிலத்தன்மையைச் சமன் செய்து உடனடி நிவாரணம் அளிக்க உதவுகிறது. அதிக காரமான உணவுகளால் ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு, சிறிதளவு சமையல் சோடாவைத் தண்ணீரில் […]
இந்தியாவில் மிக குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக திகழும் வேர்க்கடலை, பொதுமக்களால் ‘ஏழைகளின் பாதாம்’ என அழைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையான புரதச்சத்து, நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, மெக்னீசியம், போலேட் மற்றும் தாமிரம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. உடற்பயிற்சி செய்வோர், வளரும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உடனடி ஆற்றலை தரும் ஒரு இயற்கை உணவாக இது விளங்குகிறது. வேர்க்கடலையில் நிறைந்துள்ள உயர்தரப் புரதமும் […]
நேபாளத்தில் சமீபத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய திடீர் வெள்ளப் பேரழிவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலஞ்சோக் பகவதி அம்மன் சிலையில் இருந்து நீர்த்துளிகள் கசிந்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ள தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கவ்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ள இத்திருக்கோயில், கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் மன்னர் மானதேவா ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் நாட்டின் மிக சக்திவாய்ந்த பழமையான சக்தி […]
தமிழக கோயில்களில் இறை தரிசனத்திற்குப் பிறகு வெண்ணிற திருநீறு வழங்குவதே மரபாக உள்ள நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக ‘கருஞ்சாம்பல்’ பிரசாதம் வழங்கி உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லையில் (திருச்செங்கோடு அருகே) அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய முருகன் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலின் தலையாய […]
ஒரு வீட்டிலிருந்து அதிகாலையில் ஜன்னல் வழியாக தப்பி வெளியேறிய பெண்ணின் தகவல், அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்ததாக கூறப்படும் பாலியல் சுரண்டல் சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. வீட்டு பராமரிப்பு வேலைக்காக வந்ததாக நினைத்த அந்த பெண், தனது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டு, வேறு ஒரு பணிக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தப்பிய பெண் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீட்டை அதிகாரிகள் நீண்ட நாட்களாக கண்காணித்துள்ளனர். அந்த வீட்டிற்கு ஆண்கள் தொடர்ந்து […]
வெங்காயம் வாங்க இனி மார்க்கெட்டுக்கு செல்லும் பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் தமிழக அரசு புதிய நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. வெளிச்சந்தையில் அதிகரித்து வரும் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகளை கூட்டுறவுத்துறை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 7,000 கிலோ வெங்காயத்தைப் பெறுவதற்காக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பான NAFED-க்கு தமிழக […]

