பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இருவருக்குள் ஏற்பட்ட கள்ளக்காதல் பிரச்சினை, இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததாக சந்தேகித்த நண்பரை, வழிமறித்து மிளகாய்ப்பொடி தூவி ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் பகுதியில் நடந்துள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (62). பாக்குமட்டை வியாபாரம் செய்து வந்த இவர், உள்ளூர் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பாதுகாப்பு தேடி நம்பிக்கையுடன் அணுக வேண்டிய உறவே ஒரு சிறுமிக்கு அச்சமாக மாறியிருக்கிறது. 16 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. குற்றவாளிக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலத்திற்காக ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் […]
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, இமயமலைப் பகுதியில் நிலவும் மற்றொரு தீவிர இயற்கை ஆபத்து குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலைச்சரிவுகளில் உறுதியற்ற நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள் திடீரென உடைந்து விழுந்தால், மிகப்பெரிய பனிச்சரிவு உருவாகி அதன் தொடர்ச்சியாக வெள்ளம், சேற்றுப் பெருக்கு உள்ளிட்ட பல்வேறு பேரழிவுகள் ஏற்படலாம். இந்தியாவிலும் இதுபோன்ற ஆபத்தான பனிப்பாறைகள் இருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது. ‘Hanging Glacier’ என்றால் என்ன? பொதுவாக […]
ஒரு சிவப்பு நிற சூட்கேஸ்… அதற்குள் இருந்த மனித உடல் பாகங்கள்… இந்த ஒரு தடயம் சென்னை முதல் ஆக்ரா வரை போலீஸாரை அழைத்துச் சென்றது. சூட்கேஸை ரெயிலில் வைத்துச் சென்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க தொடங்கிய விசாரணை, கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிடும் நிலைக்கு கொண்டு சென்றது. அங்கு கிடைத்த மற்றொரு அதிர்ச்சி தடயம், இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் அடையாளத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. கடந்த […]
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் மீது பால் வேன் மோதிய பயங்கர விபத்தில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது வீட்டின் முன்பாக அவரது மனைவி அஞ்சம்மாள் (60) அமர்ந்திருக்க, அருகிலேயே அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த […]
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த ஆர். சுந்தர்ராஜன், தற்போது ரஜினிகாந்த் தொடர்பாக பேசியுள்ள கருத்து திரையுலக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு, தற்போது தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆர். சுந்தர்ராஜன். 1982-ம் ஆண்டு […]
உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்புகள் மற்றும் நிபுணர் குழுக்களின் தொடர் கள ஆய்வுகள் மூலம் முல்லைப் பெரியாறு அணை முழுமையான பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும், அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என்ற ரீதியில் ஏ.ஐ. (AI) தொழில்நுட்ப வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே தொடர் பீதியை உருவாக்கி வரும் கேரள யூடியூபர்கள் மீது மத்திய புலனாய்வுத் துறை மூலம் கடுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் […]
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரத்தில், எதிர்காலத்தில் அவர்களின் குடும்பத்தினர் அடையாளம் காணும் வகையில் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அடக்கம் செய்வதற்கு முன்பு ஒவ்வொரு உடலிலிருந்தும் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு உடலுக்கும் தனித்த அடையாள […]
சென்னை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் பிரபல ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேளம்பாக்கம் சுடுகாட்டுப் பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள், அங்கு வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கேளம்பாக்கம் காவல் நிலையப் போலீசார், உடலை ஆய்வு செய்தபோது அவர் கூர்மையான […]
தனது கல்வி நிறுவனத்திற்கு அனுமதி பெறுவதற்காக முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக சட்டசபையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன், அவரது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழைத் திரும்பப் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.ஜெனிபர் சார்பில் அவரது வழக்கறிஞர் பி.விஜயேந்திரன் இந்த […]

