தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான திருமணப் பரிசு அளிக்க வேண்டும் என்ற ஆசையில், நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியதாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் கூறியுள்ள நிலையில், இது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரான போலி மோசடி வலை என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் (32) என்ற பொறியியல் பட்டதாரி இளைஞருக்கும், மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், ஆண்களுக்கும் இதேபோன்ற இலவச பயணத் திட்டம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் தமிழன் பார்த்திபன் அளித்த நகைச்சுவையான பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தமிழன் பார்த்திபன் பங்கேற்றிருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில், பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் […]
நள்ளிரவில் பாலத்தின் மீது தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்த 3 வயது குழந்தையை பார்த்த பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் பெற்றோர் இருவரையும் காணவில்லை. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் குழந்தையை மீட்ட நிலையில், அவர்களைத் தேடியபோதுதான் கோதாவரி ஆற்றில் தம்பதியினர் குதித்தது தெரியவந்தது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. சாய் – சிரீஷா தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. […]
சின்னத்திரையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகை வினுஷா தேவி, தற்போது தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். விஜய் டிவியின் பிரபல சீரியல் மூலம் கவனம் பெற்ற அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தனது ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார். இந்த நிலையில், வினுஷா தேவிக்கும் லிங்கா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. வினுஷா தேவி முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் ரசிகர்களிடம் […]
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பிளஸ்-2 படித்து வந்த 17 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அவரது சித்தப்பாவை, காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவாடானை வட்டாரத்தைச் சேர்ந்த அந்த மாணவி, தேவகோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று கொண்டு தனது பாட்டி வீட்டில் தங்கி வந்துள்ளார். அதே வீட்டில் மாணவியின் சித்தி மற்றும் சித்தப்பாவான […]
திருமணப் பரிசு என்றால் நகை, வாகனம், வெளிநாட்டு சுற்றுலா என வழக்கமான பரிசுகள்தான் பெரும்பாலும் நினைவுக்கு வரும். ஆனால், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசை வழங்க முடிவு செய்துள்ளார். பூமியில் ஒரு சொத்து வாங்குவதற்குப் பதிலாக, நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அதைத் தனது திருமணப் பரிசாக வழங்க உள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வசிக்கும் […]
மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 தொகையை எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு தற்போது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான உரிமைத் தொகை சில பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இதனால், வழக்கமாக தங்களது கணக்கில் பணம் வரும் என எதிர்பார்த்திருந்த பெண்கள், தொகை வராததற்கான காரணம் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக […]
2027-28 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை வரவிருக்கும் அக்டோபர் 12 முதல் மத்திய நிதியமைச்சகம் தொடங்க உள்ளது. பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்துவதற்கான சீர்திருத்தங்களைத் தொடர்வது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் உள்நாட்டுத் தேவையை அதிகரிப்பது ஆகியவை இந்த நிதி ஆண்டின் பட்ஜெட்டின் முக்கிய இலக்குகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் உயர்ந்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலகல்களுக்கு நடுவே இந்த வரவிருக்கும் […]
10 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் உணவு கட்டுப்பாட்டு ஆணையம் ஆலோசனைகள் நடத்தியும், விவாதித்தும், முடிவுகளை ஒத்திவைத்தும் வருகிறது. இதற்கிடையில், நாட்டில் தொற்றா நோய்களின் சுமை சீராக அதிகரித்து வருகிறது. தற்போது நான்கில் ஒரு இந்தியர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த பத்தாண்டுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் பருமன் இருமடங்காக அதிகரித்துள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் முன்புறத்தில் லேபிள் ஒட்டுவது குறித்த விவகாரம்தான் தற்போது முக்கிய பேசுபொருளாக உள்ளது. அதாவது, உணவுப் […]
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, கொல்கத்தா யுவபாரதி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்தால் பாதிக்கப்பட்ட 33,000 ரசிகர்களுக்கு, மாநில விளையாட்டுத்துறை பட்ஜெட்டிலிருந்து டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி உறுதியளித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 13 அன்று யுவபாரதி மைதானத்திற்கு லியோனல் மெஸ்ஸி வருகை தந்தபோது அந்த நிகழ்வில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முந்தைய திரிணாமுல் […]

