மோந்தா (Montha) புயலின் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வரை மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் எந்தவிதமான விடுமுறை அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனால், பள்ளிக்குச் செல்ல […]

தமிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வியாண்டில், 311 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து வரும் நிலையிலும், இத்தனை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாத இந்தப் பள்ளிகளில் மொத்தம் 432 ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு ஊக்குவிப்புத் […]

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று முன்தினம் கோட்டையூர் பரிசல் துறையின் காவிரி ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் உடல் மிதந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான […]

மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகரும் மோந்தா புயல். “வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 600 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் தொடர்ந்து நகர வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

ரயில் பயணத்தின்போது கவனக்குறைவால் செல்போன், பர்ஸ் அல்லது வேறு ஏதேனும் முக்கியமான பொருள்கள் கீழே விழுந்துவிட்டால், பதற்றப்படாமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசர வழிமுறைகளை ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்காக வெளியிட்டுள்ளது. கம்ப எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள் (Pole Number): உங்கள் பொருள் எந்த இடத்தில் கீழே விழுந்ததோ, அந்த ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுவப்பட்டிருக்கும் மின்சார கம்பம் அல்லது கிலோமீட்டர் கல்லில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ள எண் […]

பீகார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் 2025 கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலுக்கான அட்டவணையையும், இடைத்தேர்தல்களையும் அறிவித்தது. பீகார் தேர்தல்களில் வாக்குப்பதிவு முறையே நவம்பர் 6, 2025 மற்றும் நவம்பர் 11, 2025 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 126 (1)(b), அந்த வாக்குச் சாவடியில் எந்தவொரு தேர்தலுக்கும் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு […]