சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பட வெளியீட்டை ஒட்டி, சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் பகிர்ந்துள்ள சமூக வலைதளப் பதிவுகள் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. இதில் சிவகார்த்திகேயன் தனது மனதில் இருக்கும் ரஜினி மீதான அபிமானத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தனுஷ் ஒரே வரியில் தனது வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்தின் படங்களைப் பார்ப்பதில் தனக்கு இருக்கும் ஆர்வம் இன்றுவரை குறையவில்லை என்பதை சிவகார்த்திகேயன் தனது பதிவில் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். […]

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்காமல் சுமார் 37 நிமிடங்கள் காத்திருக்க வைத்ததால், அவரது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு செவிலியர்களின் பணிப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடந்த இந்தச் சம்பவம் மருத்துவப் பணியாளர்களின் அலட்சியம் குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் சுட்டன்-இன்-ஆஷ்ஃபீல்டு பகுதியில் உள்ள கிங்ஸ் மில் மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2023 செப்டம்பர் 13ஆம் தேதி அதிகாலை, 41 […]

96 வயது மூதாட்டியை 18 வயது இளைஞர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் மெக்சிகோவில் பேசுபொருளாகியுள்ளது. மணமக்கள் இருவருக்கும் இடையே 78 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருப்பதுதான் இந்தச் சம்பவத்தின் முக்கியக் கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது. மெக்சிகோவின் குவிண்டானா ரூ (Quintana Roo) மாகாணத்தில் உள்ள ஒத்தோன் பி. பிளாங்கோ (Othón P. Blanco) நகராட்சியில் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் தேசிய புள்ளியியல் மற்றும் புவியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள திருமணப் […]

இந்தியாவில் இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் குறிப்பிட்ட மாடல் பவர் பேங்கைக் கொண்டு செல்ல விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA தடை விதித்துள்ளது. MOBIKINS MK-PB-04 என்ற மாடல் பவர் பேங்க், இண்டிகோ விமானத்தில் தீ விபத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம், ஞாயிற்றுக்கிழமை பவர் பேங்க் தொடர்பான தீ விபத்து காரணமாக ஹைதராபாத்துக்குத் திருப்பிவிடப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, […]

ரயில் நிலைய கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற பயணக் காப்பீட்டுப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக உள்ளது. இதற்காக, வரும் அக்டோபர் 27ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த வசதியை அமல்படுத்த ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையைச் செயல்படுத்தத் தவறினால் ரயில்வே வாரியமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். நேரடியாக டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கும் காப்பீடு வழங்குவது […]

உத்தரப் பிரதேசத்தில் ஒரு குடும்ப விருந்து, பல குடும்பங்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. விருந்தில் பங்கேற்பதற்காகப் பலரை ஏற்றிச் சென்ற படகு கங்கா நதியின் நடுப்பகுதியில் கவிழ்ந்ததில் 13 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறவினர்களை இழந்த நபரின் துயரம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது. விபத்தில் உயிர் தப்பிய சிறுவர்கள் கூறிய விவரங்கள், படகின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. படகில் ஏற்கெனவே சிறிய துளை […]

பூண்டு பல நூற்றாண்டுகளாக சமையலறைகளில் சுவைக்காக மட்டுமின்றி சிறந்த இயற்கை மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம் மற்றும் செலினியம் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய கனிமங்கள் நிறைந்துள்ளன. பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் கொண்ட பூண்டை பச்சையாகவோ அல்லது நெருப்பில் சுட்டு உண்பதோ பல நோய்களை விரட்ட உதவும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இரவில் […]

நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தற்போது 24-வது தவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 23-வது தவணை விடுவிக்கப்பட்ட நிலையில், அடுத்த தவணை தொகை ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 24-வது தவணை விடுவிக்கப்படும் உறுதியான தேதியை மத்திய […]

தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் வழியாக ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை அடையும் வகையில், வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் (PCARDB) மூலமாக பொதுமக்களுக்கு நீண்ட கால கடன்கள் (Long Term Loans) வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன்களுக்கான […]

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சாதகமாக உருவாகியுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று (அக்டோபர் 15) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அக்டோபர் 15 முதல் 18 வரை பரவலாக கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தின் முதன்மை நீர் ஆதாரமாக விளங்கும் இந்த வடகிழக்கு பருவமழை […]