அமெரிக்காவில் மனிதர்களின் மூளையைத் தாக்கி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் மிக அரிய வகை பூஞ்சை தொற்று வேகமாகப் பரவி வருவதாக புதிய ஆய்வு அறிக்கை எச்சரித்துள்ளது. கிளாடோஃபைலோஃபோரா பாண்டியானா (Cladophialophora bantiana) என்றழைக்கப்படும் இந்த கருமை நிற பூஞ்சை, மனிதர்களின் மூளையை நேரடியாகத் தாக்கி சீழ் கட்டிகளை உருவாக்குகிறது. தி லான்செட் மருத்துவ இதழின் கூற்றுப்படி, இந்த பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 60% முதல் 70% பேர் தீவிர சிகிச்சை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வீட்டில் பொரிக்க பயன்படுத்திய எண்ணெய்யை 1,2 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டுமென FSSAI அறிவுறுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் அதே எண்ணெய்யை சூடாக்கும் போது அதன் வேதியல் தன்மை மாறும் என்றும் எச்சரித்துள்ளது. அப்படி சமைப்பதால் புற்றுநோய் வருவதற்கான அபாயமும் உள்ளது. ஆகையால் முடிந்தவரை எண்ணெய்யை உடனுக்குடன் பயன்படுத்தி விடுவதே சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தனது கட்டுப்பாடுகளையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளதை அடுத்து, […]
டெல்லி மெட்ரோ நிலையத்திற்குள்ளேயே வெறும் 400 ரூபாய்க்கு தங்கும் விடுதி செயல்பட்டு வருவது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த பயணியான மியா நிகோல் (Mia Nicole) என்பவர் தனது தோழியுடன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டபோது, பட்ஜெட் விலையில் தங்குமிடம் தேடியுள்ளார். அப்போது புது டெல்லி ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள டெல்லி மெட்ரோ கட்டிடத்திற்குள் அமைந்துள்ள ‘மெட்ரோ ஸ்டே இப்போஸ்ட்’ (Metro Stay) என்ற […]
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தனியார் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 29 சிறுவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத் தலைநகரான பெஷாவரில் உள்ள திர் காலனி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வியாழக்கிழமை பள்ளியில் மாணவர்கள் இருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரை திடீரென […]
அமீர் கானின் உறவினரும் பாலிவுட் நடிகருமான இம்ரான் கானை அக்டோபர் 28ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மும்பை போலீசார் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது. எனினும், போலீசார் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக […]
இந்தியாவில் இனி தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையில், அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் ‘காலர் ஐடி’ (Caller ID) சேவையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வரும் நவம்பர் 1 முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. டெலிகாம் துறை அமைச்சகத்தின் (DoT) உத்தரவின்படி, 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் அனைத்து மொபைல் பயனர்களுக்கும் ‘காலர் நேம் பிரசென்டேஷன்’ (CNAP) முறை தானாகவே செயற்படுத்தப்படும். […]
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள அப்ரிதி அபாத் பகுதியில், தனியார் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 21 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர்; மேலும் 21 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் வயது 7 முதல் 12க்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக லேடி ரீடிங் மருத்துவமனை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களைக் காப்பாற்றும் நோக்கில் மருத்துவமனையில் […]
உருளைக்கிழங்கு கறி சமைத்துக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியைக் கடித்தும் கல்லால் தலையில் தாக்கியும் படுகாயப்படுத்திய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த 40 வயது பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், சௌரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டோமாம்பூர் கிராமத்தில் அக்டோபர் 12ஆம் தேதி மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஓம் பிரகாஷ் விஸ்வகர்மா என்பவருக்கும் அவரது […]
நாடு முழுவதும் ரயில்வேயில் பணியாற்றும் 11.4 லட்சம் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸாக அதிகபட்சம் ரூ.17,951 கிடைக்க உள்ளது. 2025-26ஆம் ஆண்டுக்கான உற்பத்தித் திறன் அடிப்படையிலான போனஸை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக மொத்தம் ரூ.2,009.61 கோடி செலவிடப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் […]
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மனிதர்களால் மட்டுமல்ல, இனி மனித உருவ ரோபோக்களாலும் ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது ஜெர்மனியில் நடந்துள்ள ஒரு சம்பவம். 16 வயது சிறுமியிடம் மனித உருவ ரோபோ ஒன்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த ரோபோவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ரோபோக்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்த விவாதமும் […]

