ஷாப்பிங் பில்ல்கள், உணவக (restaurant) ரசீதுகள் மற்றும் ATM ஸ்லிப்புகள் போன்றவற்றில் Bisphenol S (BPS) எனப்படும் ஒரு மிகவும் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் இருக்கக்கூடும். அந்த காகிதங்களை தொடும் போது வெறும் சில விநாடிகளில் தோல் மூலம் உடலுக்குள் உறிஞ்சப்பட்டுவிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. BPS என்பது ஹார்மோன் சீர்குலைக்கும் ஒரு ரசாயனமாகும், இது ஈஸ்ட்ரோஜனைப் பிரதிபலிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி உள்ளிட்ட உடலின் இயல்பான […]

ஐடிஐ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு செய்து வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் ஜூலை 31 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுகிறது. தொழிற்பயிற்சி […]

நமக்கு இருக்கின்ற பிரச்சினையால் நம்மைவிட, நம்முடன் இருப்பவர்கள் அதிக தொந்தரவை எதிர்கொள்ள நேரிடுகிறது என்றால் அது குறட்டை சத்தம் தான். குறட்டை சத்தத்தால் வெளிநாடுகளில் விவாகரத்து பெற்றவர்களும் உண்டு. அவ்வளவு ஏன், நாமே கூட முழுமையான தூக்கத்தை தூங்கிவிட முடியாது. என்ன செலவானாலும் பரவாயில்லை, எத்தனை மருத்துவரைப் பார்த்தாலும் பரவாயில்லை, இந்தக் குறட்டை பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் முதலில் பிரச்சினைக்கு என்ன […]

உணவுகள் டெலிவரிக்கு பயன்படும் கருப்பு பிளாஸ்டிக் டப்பாவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எந்த உணவு ஆர்டர் செய்தாலும், அவை பெரும்பாலும் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் நம் வீடுகளுக்கு டெலிவரி ஆகின்றன. பிரியாணியோ, ஃபிரைட் ரைஸோ அல்லது சாம்பார் சாதமோ சுடச்சுட அந்த கருப்பு நிற டப்பாவில் வருகிற உணவை, வரவிருக்கிற ஆபத்தை உணராமல் குழந்தைகளில் ஆரம்பித்து […]

உலகம் முழுவதும் எத்தனையோ ஆபத்தான இடங்கள் உள்ளன.. அத்தகைய ஒரு ஆபத்தான இடம் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.. அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில் ஒரு பிரம்மாண்டமான பாறையின் மேல் அமைந்துள்ள திரித்ரங்காவிட்டி கலங்கரை விளக்கம் அந்த இடம்.. ஐஸ்லாந்து கடற்கரையில் உள்ள இந்த கலங்கரை விளக்கம் ஏன் உலகின் மிகவும் ஆபத்தான இடமாகக் கருதப்படுகிறது? தெரிந்து கொள்வோம்.. திரித்ரங்காவிட்டி கலங்கரை விளக்கத்தை அடைய விரும்புவோர், பிரம்மாண்டமான பாறையில் ஏறியோ […]

ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் குறித்த தகவல் ஆவணத்தில் இருந்தால், அதுகுறித்து வருமானவரித் துறைக்கு ஆவணத்தின் நகலுடன் பதிவு அதிகாரி தகவல் அளிக்க வேண்டும் பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவுத்துறை தலைவர், அனைத்து பதிவு அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், துணை பதிவுத் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ரூ.20,000-க்கும் அதிகமாக ரொக்கப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தால், வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் […]