இன்று பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 27 மின்சார ரயில் ரத்து செய்யபட்டுள்ளது. சென்னையில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில், ஐடி துறை என பல்வேறு தேவைகளுக்காக அண்டை மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வசித்து வருகின்றனர். சென்னை மக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் இருந்து வருகின்றன. சென்னை பயணிகளுக்கு புறநகர் […]

ஈரானில் சிக்கித் தவித்த 110 இந்திய மாணவர்கள் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடைந்துள்ளனர். இந்த மாணவர்களில் பெரும்பாலோர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்கள் உர்மியா மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். மாணவர்கள் புதன்கிழமை மாலை ஆர்மீனியா மற்றும் தோஹா வழியாக டெல்லி விமானம் மூலம் வந்தனர். இருப்பினும், அவர்களின் விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் […]

இமாச்சலப் பிரதேசத்தில் 2023-ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளம், நிலச்சரிவு, பெருமழை சம்பவங்களுக்குப் பிறகு மீட்பு, மறுசீரமைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசின் உதவியாக ரூ. 2006.40 கோடி வழங்குவதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு, தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் மீட்பு […]

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்த நடிகை விஜயலட்சுமி, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “இலங்கையில் தமிழர்களுக்காக பிரபாகரன் உயிரை கொடுத்து போராடிக்கொண்டு இருந்தபோது, இலங்கையில் தமிழர்கள் எல்லாம் செத்துக்கொண்டு இருந்த போது, இங்க என் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு, குடித்துக்கொண்டு ஆட்டம்போட்டுக்கொண்டு எல்லாத்தையும் பண்ணிட்டாரு. தலைவர் பிரபாகரனுடைய மகன் பாலச்சந்திராவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஒரு […]

ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள நெமுரோ தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) தெரிவித்துள்ளது. சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, இந்த நிலநடுக்கம் கடலோரத்தில் நிகழ்ந்ததாகவும், அதன் மையப்பகுதி 42.8° வடக்கு அட்சரேகையிலும் 146.4° கிழக்கு தீர்க்கரேகையிலும் இருந்தது. தற்போது வரை, சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை […]

தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் மத்திய பா.ஜ.க. அரசு பார்க்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதாக மத்திய அரசை கண்டித்து, திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் தி.க.தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் […]

காசா மீதான இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெறும் வான்வழித் தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் உயிரிழப்புகளை தினசரி பெருக்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா முழுவதும் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர், உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்குப்பிறகு, 2024 ஜனவரியில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முயற்சியால் போர் […]

அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு , விமான நிலையங்களுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள விமானப் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வரைவு விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் முன்மொழியப்பட்ட விமான விதிகள், நேற்று (ஜூன் 18) அறிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட விமான நிலைய மண்டலங்களில் உயர வரம்புகளை மீறும் […]

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; 20.06.2025 (வெள்ளிக்கிழமை) 21.06.2025 (சனிக்கிழமை) , 22.06.2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு […]