தமிழகத்தில் இன்று (அக். 16) பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான […]

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை – நமீபியா அணிகள் மோதுகின்றன. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை, கத்துக்குட்டி அணியான நமீபியாவை (இந்திய நேரப்படி காலை 9.30 மணி) சந்திக்கிறது. தரவரிசையில் பின்தங்கியதால் நேரடியாக ‘சூப்பர் 12’ சுற்றில் நுழையும் வாய்ப்பை இழந்து […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Director (Industrial Systems & Products பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 45 […]

வீரப்பனை சுட்டு வீழ்த்திய தமிழக ஐபிஎல் அதிகாரி கே.விஜயகுமார், உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார். தமிழக கர்நாடக எல்லைகளில் காவல்துறைக்கு சிம்மசொப்பனமாக இருந்த வீரப்பனை சுட்டு வீழ்த்தியவர் தமிழக ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார். இவர் 1975இல் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தவர். பின்னர் சேலம், தருமபுரி மாவட்டங்களில் பணிபுரிந்து அதன் பிறகு மத்திய அரசு பணியில் ஈடுபடுத்தப்பட்டார். அங்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் […]

பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையின் மாடியில் அழுகிய நிலையில், சுமார் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உலக அளவில் அவ்வப்போது நிகழும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டு வீதிகளில் உடல்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள […]

அக்கினி வீரர்களுக்கு வங்கி வசதிகளை அளிக்கும் விதத்தில், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் இந்திய ராணுவம் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் […]

கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, விஷ ஊசி போட்டு கொலை செய்த பெண் டாக்டர் மற்றும் கள்ளக்காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் சதீஷ் கேசவரா தேஷ்முக், தனது மனைவி, மகனுடன் வசித்து வந்துள்ளார். தேஷ்முக் மற்றும் அவரது மனைவி இருவருமே மருத்துவர்கள்தான். இந்நிலையில், மனைவி சுகாசினியின் நடத்தையில் தேஷ்முக்கிற்கு அண்மைக்காலமாக சந்தேகம் இருந்து வந்துள்ளது. அதை உறுதிப்படுத்துவதற்காக கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி […]

பெற்ற மகளை கரும்பு காட்டுக்குள் 3 நாட்கள் கட்டி போட்டு உணவு தராமல் நரபலி கொடுத்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் பவேஷ் அக்பரி. இவருக்கு தாரியா (14) என்ற மகள் இருந்தார். இவர் சூரத் பகுதியில் தங்கி, அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பவேஷ் பெரும் பண நெருக்கடியில் இருந்துள்ளார். இதனால், கடன் […]

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா – வடதமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, […]

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்பு முறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பட்நாயக், அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் முறைப்படுத்தப்படுவார்கள் என்றும், இதற்கான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுப் பணியில் உள்ள 57,000 ஒப்பந்தப் பணியாளர்கள் முறைப்படுத்தப்படுவார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அரசு இதற்காக ஆண்டுக்கு ரூ.1,300 கோடி கூடுதலாகச் செலவு செய்யப்படும் […]