15 வயது பள்ளி மாணவி தகாத உறவின் மூலம் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூரில் உள்ள ராமகிருஷ்ணா நகர், காந்தி தெருவைச் சேர்ந்த 15 வயது சிறுமி வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவ பரிசோதனைக்காக அவரது தாயார், சிறுமியை அழைத்துக் கொண்டு ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
அம்பத்தூரில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை தொடர்பாக, அவரை காதல் வலையில் வீழ்த்திய டியூஷன் டீச்சரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வரும் ஷர்மிளா, பள்ளி முடிந்து மாலை நேரத்தில் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். இவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அதேசமயம், கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் […]
க்யூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கைகள் நடைபெறும். தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் சேர்க்கைக்காக க்யூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதிய மாணவர்கள் எங்களுடைய வலைதளமான (www.rgniyd.gov.in) –ல் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த மாணவர்கள் க்யூட் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், மத்திய அரசின் இது இடஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வரும் […]
சர்ச்சையில் சிக்கிய மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்துகள் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மெய்டன் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்த இருமல் மருந்துகளை உட்கொண்டதால் காம்பியா நாட்டில் குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதையடுத்து, சோனிபட் நகரில் மெய்டன் பார்மாவுக்கு சொந்தமான ஆலையில் ஆய்வு நடத்திய பின் இருமல் மருந்துகள் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட […]
தமிழகத்தில் வணப்பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கம் முதலமைச்சர் அவர்களால் கடந்த 24.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழக வணம் மற்றும் பசுமைப் பரப்பினை 33சதவீதமாக உயர்த்துததனை முக்கிய நோக்கமாகக் கொண்டு இவ்வியக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் வளர்ப்பிற்கு, ஊக்குவித்தல் இவ்வியக்கத்தின் நோக்கமாகும். அதனடிப்படையில், வேளாண் பெருமக்கள், தொழில் நிறுவனங்கள். மக்கள் நலச்சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தணி நபர்கள் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய போக்குவரத்து இணைப்பில் முன்னணி துறையாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. இதில், 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் ரயில்வே துறையை நாள்தோறும் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து […]
நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 16 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், […]
டெல்லியில் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக, டெல்லி அரசு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தியுள்ளது. துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இது பணவீக்கத்தில் இருந்து அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் என்று கூறினார். திருத்தியமைக்கப்பட்ட மாத ஊதியம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் அகவிலைப்படியின் பலன்களை அமைப்புசாரா துறையில் குறைந்தபட்ச ஊதியத்தில் […]
அடுத்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 2023ஆம் ஆண்டில், 5 ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட, 24 அரசு பொது விடுமுறை நாள்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; “மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகள், கழகங்களுக்கும் 2023-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. […]
உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டுபாடு விதித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; இனிப்பு, காரம் தயாரிக்கும் சமையலறையில் போதுமான உறிஞ்சும் அமைப்புடன் கூடிய புகை போக்கி மற்றும் முறையான கழிவு நீர் வடிகால் அமைப்பு வேண்டும். உணவு பொருள் தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள் புகாத வகையில் தடையமைப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செயல்படுத்த […]