எத்தியோப்பியா தேவாலயத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 36 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவி ன் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அம்ஹாரா பிராந்தியத்தில் அரெர்டி நகரம் உள்ளது. இந்நகரில் உள்ள மென்ஜார் ஷென்கோரா அரெர்டி மரியம் சர்ச்சில், ஆண்டுதோறும் மதவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர். […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் மொத்தம் 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் பி.மகேஷ், சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங்; ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன. ஆகஸ்ட் 15-ம் தேதி வரை முதல்கட்டமாக நடைமேடைகள், ரயில் நிலையங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆக‌ஸ்ட் 16 முதல் செப்டம்பர் 16-ம் […]

தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா இடையே நேற்று இரவு கரையை கடந்தது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது […]

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. குறிப்பாக கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான உதவிகளை வழங்கினார்.. அதே போல் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் உடனடியாக கரூர் விரைந்தனர். மேலும் […]

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று கொலம்பியாவில் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தை விமர்சித்தார், இன்று இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் அதன் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறினார். கொலம்பியாவின் EIA பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய காந்தி, “கட்டமைப்பு குறைபாடுகள்” என்று விவரித்ததை சுட்டிக்காட்டி, நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட மரபுகள் செழிக்க இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பேசிய அவர் “இந்தியா பொறியியல் […]

உங்கள் நண்பர்களிடம் பேசியவுடன் உங்கள் தொலைபேசியில் ஒரு தயாரிப்புக்கான விளம்பரம் தோன்றுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இது உங்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் நடக்கும். எனவே பல நேரங்களில் நம் ஸ்மார்ட்போன் நமது தனிப்பட்ட உரையாடல்களைக் கேட்கிறதா என்று யோசிப்போம்.. உண்மையில், பல பயன்பாடுகள் உங்கள் தொலைபேசியில் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தலாம். ஆனால் இது நடப்பதைத் தடுக்கக்கூடிய அம்சங்கள் உங்கள் தொலைபேசியில் உள்ளன. Android இல் மைக்ரோஃபோன் அமைப்புகளை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் […]

தசரா கொண்டாட்டங்களை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் பரேலி பிரிவின் நான்கு மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை, PAC மற்றும் RAF பணியாளர்கள் தெருக்களில் நிறுத்தப்பட்டு, வானத்தை ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். பரேலியில் 48 மணி நேர இணைய சேவைகளை நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.. செப்டம்பர் 26 ஆம் தேதி கோட்வாலியில் நடந்த மோதலைத் தொடர்ந்து, “ஐ லவ் முஹம்மது” சுவரொட்டியை ஒட்டி நடந்த போராட்டத்திற்குப் பிறகு கல்வீச்சு […]

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெரியண்ண உடையாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், கால்நடைகளை மேய்க்கச் சென்ற ஒருவர், ஓரிடத்தில் மண் மேடு இருப்பதையும், நாய்கள் அங்கு துணியை இழுப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அதன் அருகே சென்று பார்த்தபோது, புதைக்கப்பட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தின் தலைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்துள்ளது. இதனால் பதறிப்போன அவர், போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், மண்ணைத் தோண்டி […]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமான போராட்டங்களில் ஒன்றாக மாறி உள்ளது.. அரசாங்கம் 38 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதற்காக போராட்டம் தொடங்கியது, ஆனால் இப்போது இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டமாக விரிவடைந்துள்ளது, இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக […]