காலை உணவு உங்கள் நாளின் ஆற்றலையும் மனநிலையையும் தீர்மானிக்கிறது. ஆரோக்கியமான ஆனால் எளிதான காலை உணவை நீங்கள் விரும்பினால், பழங்கள் சிறந்த வழி. அனைத்து பழங்களையும் வெறும் வயிற்றில் சாப்பிட முடியாது என்றாலும், சில பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதிக நன்மைகளை வழங்குகின்றன. இதுபோன்ற ஐந்து பழங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். பப்பாளி வெறும் வயிற்றில் சாப்பிட பரிந்துரைக்கப்படும் ஒரு பழம். இதில் பப்பேன் என்ற நொதி உள்ளது, […]

பல ஆண்டுகளாக நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி வரும் கேள்வி முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிட வேண்டுமா? வேண்டாமா? என்பது தான். சிலர் இதை ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் என்று பாராட்ட, வேறு சிலர் இதில் உள்ள கொலஸ்ட்ரால் குறித்து அஞ்சுகிறார்கள். இதனால் பலர் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டுவிட்டு மஞ்சள் கருவைத் தவிர்த்து விடுகின்றனர். சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையில், முட்டையின் மஞ்சள் கருவின் உண்மைத் தாக்கம் என்னவென்று இப்போது பார்க்கலாம். மஞ்சள் […]

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, புதன்கிழமை, மஸ்க் 500 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 41.7 லட்சம் கோடி) நிகர மதிப்பை எட்டிய முதல் நபரானார். இந்த சாதனை மஸ்க்கின் நிலையான முதலீடுகள், வணிக மற்றும் தொழில்நுட்பத்தில் தலைமைத்துவத்தின் விளைவாகும். மஸ்க்கின் செல்வம் டெஸ்லாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவரது விண்கலத் திட்டமான ஸ்பேஸ்எக்ஸ், ஆகஸ்ட் 2025 […]

மகாத்மா காந்தியும் பண்டித ஜவஹர்லால் நேருவும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தனர். இந்த இரண்டு மாமனிதர்களும் முதன்முதலில் 1916 ஆம் ஆண்டு காங்கிரஸ் அமர்வின் போது சந்தித்தனர். மகாத்மா காந்திக்கும் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இந்திய சுதந்திர இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாகும். சுருக்கமாக இருந்தாலும், அது பின்னர் சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்து சுதந்திர இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்த ஒரு உறவின் […]

உலக நாடுகள் இணைந்து இஸ்ரேல் – காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர குரல் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார். இந்தப் பரிந்துரைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்திருக்கும் அதேவேளையில், காஸாவில் எஞ்சியிருக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்ப் முன்வைத்துள்ள 20 அம்சத் […]

பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசு எத்தகைய ஏமாற்று வேலையை செய்துவிடக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தேனோ, அந்த ஏமாற்று வேலையை ககன் தீப் சிங் குழுவை பயன்படுத்தி சாமர்த்தியமாக செய்திருக்கிறது. ககன் தீப் சிங் […]

ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் மீண்டும் ஒரு பிரம்மாண்ட இந்திய படைப்பாக வெளியாகி, ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. முதல் பாகமான ‘காந்தாரா’ ஏற்படுத்திய தாக்கத்தை விட பல மடங்கு சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உழைப்பும், அதில் இருந்த தெய்வீகத் தன்மையைப் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற அவரது முனைப்பும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. கதைக்களம் […]